இந்திய ரயில்வேயில் டெக்னீசியன் பணிவாய்ப்பு!

இந்தியாவின் மிகப்பெரிய துறையான ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாகும். அதனால் ரயில்வேயில் வெளியிடப்படும் அறிவிப்புகளுக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருப்பர். அந்த இந்திய ரயில்வேயில் ஆறாயிரத்துக்கும் அதிகமான தொழில்நுட்ப வல்லுநர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விபரம்
டெக்னீசியன் கிரேடு III பிரிவில் 6000,
டெக்னீசியன்கிரேடு I (சிக்னல்) பிரிவில் 180 என மொத்தம் 6180 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
டெக்னீசியன் கிரேடு 1 சிக்னல் பதவிக்கு, விண்ணப்பதாரர்கள் இயற்பியல், மின்னணுவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் அல்லது கருவியியல் ஆகியவற்றில் இளங்கலை அறிவியல் (பிஎஸ்சி) பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது தொடர்புடைய துறைகளில் டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பதவிகளுக்கான வயது வரம்பு ஜூலை 1, 2025 தேதியின்படி 18 முதல் 33 வயது வரை இருக்க வேண்டும்.
டெக்னீசியன் கிரேடு 3 பதவிக்கு, விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி/மெட்ரிகுலேஷன்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஃபவுண்டரிமேன், மோல்டர், பேட்டர்ன் மேக்கர் அல்லது ஃபோர்ஜர் மற்றும் ஹீட் ட்ரீட்டர் போன்ற தொழில்களில் ஐடிஐ அல்லது அப்ரண்டிஸ்ஷிப்பை முடித்திருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
டெக்னீசியன் கிரேடு 1 சிக்னல் பணி சம்பள நிலை 5 இன் கீழ் வருகிறது. இதற்கு மாத ஊதியம் ரூ.29,200 முதல் 92,300 வரையிலும், சம்பள நிலை 2 இல் உள்ள டெக்னீசியன் கிரேடு 3 பணிக்கு ரூ.19,900 முதல் 63,200 வரை என 7வது மத்திய ஊதிய ஆணையத்தின் (CPC) வழிகாட்டுதல்களின்படி கூடுதல் கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளும் சேர்த்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 3 கட்டத் தேர்வு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்களுக்கு முதலில் கணினி வழியில் நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வயதுத் தகுதி:
டெக்னீசியன் கிரேடு 1 பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். டெக்னீசியன் கிரேடு 2 பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை:
ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஜூன் 28 ஆம் தேதி முதல் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் https://www.rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டியதற்கான அவகாசம் ஜூலை 28 ஆம் தேதி இரவு 11:59 மணிக்கு முடிவடைகிறது.
விண்ணப்பக்கட்டணம்:
ரூ. 500, பெண்கள்/எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250
கடைசிநாள்:
28.7.2025
விவரங்களுக்கு: