தேசிய விளையாட்டு போட்டியில் 73 பதக்கங்களை வென்று, தமிழ்நாடு அணி 5 வது இடம்!

தேசிய விளையாட்டு போட்டியில் 73 பதக்கங்களை வென்று, தமிழ்நாடு அணி 5 வது இடம்!

ந்தியாவின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள், 1924ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள ஆமதாபாத், ராஜ்கோட், சூரத் உள்பட 6 நகரங்களில் நடந்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், ராணுவத்தின் சர்வீசஸ் அணி ஆகிய அணிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

கடந்த மாதம் 29 ந்தேதி தொடங்கிய இந்த போட்டி இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இன்று இரவு நிறைவு விழா சூரத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் தமிழ்நாடு 25 தங்கம், 21 வெள்ளி , 27 வெண்கலம் என 73 பதக்கங்களுடன் 5வது இடம் பிடித்துள்ளது. தடகள போட்டியில் மட்டும் 7 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை தமிழ்நாடு பெற்றுள்ளது.

பதக்கப் பட்டியலில் 56 தங்கம், 34 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 121 பதக்கங்களுடன் சர்வீசஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 38 தங்கம், 38 வெள்ளி, 62 வெண்கலம் என மொத்தம் 138 பதக்கங்களுடன் மராட்டியம் இரண்டாவது இடத்திலும், 34 தங்கம், 33 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 106 பதக்கங்களுடன் அரியானா 3 வது இடத்திலும், 27 தங்கம், 23 வெள்ளி, 38 வெண்கலம் என மொத்தம் 88 பதக்கங்களுடன் கர்நாடகா 4 வது இடத்திலும் உள்ளது.

கேரளா மொத்தம் 52 பதக்கங்களுடன் 6 வது இடத்திலும், மத்திய பிரதேசம் 65 பதக்கங்களுடன் 7 வது இடத்திலும், உத்தரபிரதேசம் 55 பதக்கங்களுடன் 8 வது இடத்திலும், மணிப்பூர் 47 பதக்கங்களுடன் 9 வது இடத்திலும், 70 பதக்கங்களை வென்று பஞ்சாப் 10 வது இடத்தையும் பிடித்துள்ளது. இன்று மாலை வரையில் போட்டிகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!