தமிழகம் நாற்புறமும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக்கும்! .

தமிழகம் நாற்புறமும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக்கும்! .

//டக்கன் வேல பாப்பான் தமிழன் குடிக்க போய்ருவான் இதுபோன்ற மீம் அதிகம் வருவதை கண்டு சிரிப்பு தான் வருகிறது அறியாமையை கண்டு// -ஒரு மாநிலத்தில் அடிப்படை வேலைகளை செய்ய பிறமாநிலத்திலிருந்து ஆட்கள் அதிகளவில் வருகிறார்கள் என்றால் அம்மாநிலம் வளர்ச்சி பெற்ற மாநிலமாகவே கருதபடும்.. குறிப்பாக இங்கிருந்து வெளிநாடு சென்று பணிசெய்யும் நம் தமிழ்உறவுகள் போலதான். வெளிநாட்டில் நம் ஆட்கள் செய்யும் பெரும்பாலான பணிகளை அந்நாட்டு பூர்வகுடிகள் செய்யமாட்டார்கள். காரணம் பொருளாதார ரீதியில் அவர்கள் மேம்பட்டுவிட்டார்கள்  . அதனால் அந்த வேலைகளை செய்ய பிறநாடுகளில் இருந்து வேலை ஆட்கள் பணிக்காக அழைக்கப்படுகிறார்கள்.

ஒரு சில உயர் பணிகள் நம் கல்வி அறிவை பொறுத்து வருபவை .. மற்றபடி 70சதவிகித பணிகள் நான் மேலே குறிப்பிட்ட போலதான். நான் ஒரு ஓட்டுநர் என்மகள் தற்போது பட்டதாரி முடிக்கபோகிறாள், அடுத்து உயர்கல்வி மாஸ்டர் டிகிரி படிக்க போகிறாள்.. இவ்வளவு படிக்க வைத்த என்மகளை நான் ஒரு ஒட்டுநராக வேலைக்கு அனுப்புவேணா.? இதுதான் இன்றைய நிலை! இதை ஒரு உதாரணத்திற்காக கூறினேன். அதுபோலதான் தமிழகம் நாற்புறமும் வளர்ச்சி பெற்ற மாநிலம் . கல்வியால் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே தான் போகிறது. கல்வியால் மேம்பட்ட சமூகம் தனக்கான பணி இங்கு கிடைக்காமல் அந்த பணிக்காக பிறநாடுகளையோ பிறமாநிலத்தில் உள்ள உயர்பதவிகளை தேடி ஓடுகிறது. இது முழுமுழுக்க வளர்ச்சியே
அதனாலே அடிப்படை பணிகளை செய்ய இங்கே பிறமாநில ஏழைக்கூலிகள் தேவைபடுகிறார்கள்.

எப்படி அயல்நாட்டுகாரன் வெளிநாட்டு பணியாளர்களை நியமித்தால் ஒழுங்காக பணிசெய்வார்கள், சம்பளமும் அவன்நாட்டுக்குடிகளை விட சற்று குறைவாகவே கொடுக்கலாம்,என்ற காரணத்தால் இதுபோன்ற பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். இங்கே டாஸ்மாக் வாசல் என்றால் அங்க பீடா கடை வாசல் அவ்வளவுதான் டாஸ்மாக் 180ரூ பீடா 30ரூ அவனவனவன் வசதிக்கேற்ப…இதற்கு என்ன தான் தீர்வு? அப்போ இங்கேயும் கூலிகள் இருக்கிறார்களே ..!ஆம் இருக்கிறார்கள் தான். அவர்கள் தான் மாறவேண்டும். வாங்கும் சம்பளத்திற்கு நியாயமாக வேலைபார்க்கவேண்டும்

இன்று ஒலா ஊபர் வந்தாலும் ஒரு சிறுநிறுவனமாக என் டிராவல்ஸை சிறப்பாக தான் இயக்கி வருகிறேன்/ காரணம் எப்போதும் சீரூடையில் இருப்பேன்.. நேரம் சரியாக கடைபிடிப்பேன்.. கார் எப்போதும் சுத்தமாகவே இருக்கும். நம் தொழிலை நாம் நேர்மையாக செய்தால் எந்த இடையூறும் இல்லை என்பதே உண்மை .அரசும் வரும் காலங்களில் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியது போல் தனியார் நிறுவனங்களில் 80சதவிகித பணி.. இங்க படித்த பட்டதாரிகளுக்கு வழங்க ஆவணம் செய்யவேண்டும்.

ஏனெனில் தமிழ்ச்சமூகம் கல்வியால் மேம்பட்டுவிட்டது. அதற்கான பணிகளை உருவாக்க வேண்டியது அரசின் கடமை! அதைவிடுத்து கூலிக்கு வேலைக்குவருபவனை துரத்துவதில் எந்த லாபமும் இல்லை மாறாக நமக்கு தான் பாதிப்பு பிறமாநில பணியாளர்களை புலம் பெயர் பணியாளர் துறைமூலம் ஒழுங்குபடுத்தி அவர்கள் வருகை அவர்களின் நன்நடத்தை போன்றவற்றை கண்காணித்தாலே போதுமானது.

தமிழனை குறை கூறி மற்றவர்களை உயர்த்தி பிடிப்பது நம் மூஞ்சில் நாமே உமிந்துகொள்வது போலாகும்

நன்றி வணக்கம்.!

வடிவேல் சுப்பிரமணியம்

Related Posts

CLOSE
CLOSE
error: Content is protected !!