வெயிட் பண்ணலாம்!- கவர்னர் அறிக்கை!
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் தங்கள் செல்வாக்கு, ஆதரவு போன்றவற்றை தெரிவித்து கூறிய கருத்துகளை கேட்டு அறிந்த கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்ற தனது முடிவை உடனடியாக தெரிவிக்கவில்லை. தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அவர் அறிக்கை அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு 3 பக்க அறிக்கை கவர்னர் வித்யாசாகர் ராவ் அனுப்பினார். 3 பக்க அறிக்கையில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. சசிகலாவை ஆட்சியமைக்க தற்போதைக்கு அழைக்க இயலாது -என்று மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கவர்னர் வித்யாசாகர் ராவ் தனது முடிவு குறித்து அறிக்கையில் தெரிவிக்கவில்லை.ஆனாலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிமுக.,வில் நிலவும் பிரச்சனை உட்கட்சி பிரச்னைதான். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில், சுப்ரீம் கோர்ட் சில தினங்களுக்குள் தீர்ப்பு வழங்க உள்ள சூழலில், சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது.அதிமுக, எம்.எல்.ஏ.,க்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனரா, அவர்களில் சூழல் என்ன ? என்று விசாரணை நடத்துமாறு தமிழக டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளாராம்


