தயாரிப்பாளர் சங்கத்தினுடைய தேர்தல் ஏப்ரல் 2 -தான் நடக்குமாம்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த தேர்தல் 2015–ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது. இதில் சங்கத்தின் தலைவராக எஸ்.தாணு, செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணை தலைவர்களாக கதிரேசன், தேனப்பன் பொருளாளராக டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பில் இருந்தவர்களின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் பிப்ரவரி மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் மார்ச் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வந்த தகவலின்படி, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்பாதோர் வேட்பு மனுவைத் திரும்பப் பெற, மார்ச் 1ஆம் தேதி கடைசி நாள் என்றும், அன்றைய தினமே இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் சென்னையில் உள்ள உட்லேண்ட்ஸ் திரையரங்கில் நடைபெறவுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் விஷால் தரப்பில் புதிய மன்னர்கள் அணி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. முன்னதாக, விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட தடைக்கோரிய வழக்கில், அவர் போட்டியிட எவ்வித தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஓய்வு பெற்ற நீதிபதியும் தமிழ்த்திரைப்பட தேர்தல் அதிகாரியுமான திரு . ராஜேக்ஷ்வரன் அவர்கள் இன்று காலை 11மணி அளவில் filmchamber அலுவலகத்தில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் தேர்தல் சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் 27.02.2017 அன்று வரை உறுப்பினர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படுமாயின் புகார் கொடுக்கலாம். 28.02.2017 -ல் புகார்களுக்கு பதில் கிடைக்கும் என்று கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாபஸ் பெற கடைசி நாள் 01.03.2017.

ஏப்ரல் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை Wood lands திரையரங்கில் தேர்தல் நடைபெறும் அன்று இரவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இக்கூட்டத்தில் மூத்த தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். விஷால் அணி சார்பாக பிரகாஷ் ராஜ் ,ஆர்.பார்த்திபன், K.E.ஞானவேல்ராஜா, பாண்டிராஜ் ,SR.பிரபு ,AL உதயா மற்றும் உடன் ராதாகிருஷ்ணன், கேயார் ஆகியோர் கலந்து கொண்டனர்
சங்கத்தில் ஆயிரத்து 201 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டு போட்டு தலைவர், 2 துணை தலைவர்கள், 2 செயலாளர்கள், ஒரு பொருளாளர் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்கிறார்கள்.


