டி 20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்துக்கு மாற்றமா?

டி 20  உலகக் கோப்பை 2024  கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்துக்கு மாற்றமா?

விளையாட்டு ரசிகர்களின் திருவிழாவான 2024 டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுககளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஐசிசி இந்த தொடருக்கு 12 அணிகள் நேரடியாகத் தகுதி பெறும் என அறிவித்தது. இந்த டி20 உலகக்கோப்பை தொடரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் இங்கிலாந்துக்கு மாற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து வெளியான தகவலின் படி, ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024 ஐ வெஸ்ட்மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவு நாடுகளில் கிரிக்கெட்டுக்குத் தேவையான உள்கட்டமைப்பு இல்லாததால் இவ்வாறு ஆலோசிக்கப்படுவதாகத் தெரிகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்குள்ள கிரிக்கெட் நிர்வாகிகளே, உள்கட்டமைப்பை மிகக் குறுகிய காலத்திற்குள் மேம்படுத்துவது சிரமமாக இருப்பதால் 2024 டி20 உலகக்கோப்பையை அங்கிருந்து மாற்றுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐசிசி அமெரிக்காவில் உள்கட்டமைப்பு மிக மோசமாக இருக்கும் சூழலில் 2024 மற்றும் 2030 டி20 உலகக்கோப்பை தொடர்களை நடத்தும் நாடுகளை மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளது

அதையொட்டி 2030இல் டி20 உலகக்கோப்பையை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இங்கிலாந்தில் 2024 உலகக்கோப்பை தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி 2030இல் இங்கிலாந்தில் நடக்க உள்ள தொடரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா கூட்டாக நடத்தும். இந்த போட்டிக்கு நீண்ட காலம் கிடைக்கும் என்பதால் அமெரிக்காவில் உள்கட்டமைப்பை முழுமையாக மேம்படுத்தி விடலாம்.

இதைப் பற்றி தற்போதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலும் இல்லை என்றாலும், வரவிருக்கும் நாட்களில் அறிவிப்பு வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது.

error: Content is protected !!