32°C

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாத் துளிகள்!

admin Published: August 3, 2026 4 நிமிட வாசிப்பு Running News
எழுத்து:

சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் (Fortune Four Cinemas) இணைந்து தயாரிக்க, ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் வழங்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, கோவையில் உள்ள தனியார் கல்லூரி கலையரங்கத்தில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் ரசிகர்களின் திரண்ட முன்னிலையில் திருவிழா போல் கோலாகலமாக நடைபெற்றது.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

விழா மேடையில் திரைப் பிரபலங்களின் நெகிழ்ச்சியான பேச்சு

“சூரரைப் போற்று கூட்டணிக்கு மீண்டும் ஒரு மைல்கல்” – இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்

தேசிய விருது பெற்றுத் தந்த ‘சூரரைப் போற்று’ படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சூர்யா எனக்கு தனிப்பட்ட முறையில் செய்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன். இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ படங்களைத் தொடர்ந்து ஹாட்ரிக் கூட்டணியாக இதில் இணைந்திருக்கிறேன். ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள ‘தி ஒன்’ (The One) பாடல் ஆக்ரோஷமான கொண்டாட்டப் பாடலாக அமையும். நடிகை மமீதா பைஜூவின் ‘பட்டாம்பூச்சி’ பாடல் நடனம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

“நீண்ட நாட்களுக்குப் பின் காதல் பாடல்” – பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ்

என் வாழ்க்கையில் சூர்யா சார் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவரது ‘ஆயுத எழுத்து’ படத்தைப் பார்த்த பிறகுதான் நான் இயக்குநராக வேண்டும் என்ற வித்தை விதைத்தேன். இதுவரை மாஸ் பாடல்களை எழுதி வந்த எனக்கு, முதல்முறையாக ஒரு அழகான காதல் பாடலை (‘பட்டாம்பூச்சி’) எழுத வாய்ப்பளித்த இயக்குநர் வெங்கிக்கும், ஜி.வி. பிரகாஷ் சாருக்கும் நன்றி.

“சூர்யாவிடம் கற்றுக் கொண்டவை ஏராளம்” – நடிகை மமீதா பைஜூ

சூர்யா சாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு முன்பு கைநழுவிய நிலையில், இப்போது அமைந்தது மறக்க முடியாத அனுபவம். படப்பிடிப்பு தளத்தில் அவரது ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் பெருந்தன்மை என்னை மிகவும் கவர்ந்தது. இப்படத்தில் ராதிகா சரத்குமார் மேடம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்தார்கள்.

“தமிழில் ஒரு ‘அலகொண்ட வைகுந்தபுரம்'” – தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்ஷீ

கோவை எங்களின் அதிர்ஷ்டகரமான இடம். பழனி முருகனை தரிசித்துவிட்டு இங்கிருந்துதான் படப்பிடிப்பையும் விளம்பரத்தையும் தொடங்கினோம். சூர்யா சாருக்கு இந்த கதையில் ‘சஞ்சய் ராமசாமி’ (கஜினி) போன்ற ஒரு இளமையான, புதுமையான அடையாளம் இருக்கும். தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அலகொண்ட வைகுந்தபுரம்’ போல, தமிழில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

“குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டிய படம்” – இயக்குநர் வெங்கி அட்லூரி

சூர்யா சாரின் சொந்த மண்ணான கோவையில் இந்த விழாவை நடத்துவதில் மகிழ்ச்சி. படத்தின் முதல் பாதியை பின்னணி இசையுடன் பார்த்துவிட்டேன், மிகச் சிறப்பாக வந்துள்ளது. வீட்டில் மது, சிகரெட் போன்றவற்றை மறைத்து செய்யும் சூழலில் சூர்யா, மமீதா, ராதிகா இடையே வரும் 10 நிமிட நகைச்சுவைக் காட்சி அனைவரும் தங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு மகிழும் வகையில் இருக்கும்.

“மொபைல் ஸ்கிரீனை தாண்டி உறவுகளுக்கு நேரம் கொடுங்கள்” – நடிகர் சூர்யாவின் நெகிழ்ச்சி உரை

விழாவில் சிறப்புரையாற்றிய நடிகர் சூர்யா பகிர்ந்த முக்கிய அம்சங்கள்:

  • ரசிகர்களுக்கு நன்றி: பிறந்தநாளைக் கொண்டாடாத நிலையிலும் 5,000-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தும், 40,000-க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அன்பைப் பொழிந்த ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றிகள்.

  • கோவை நினைவுகள்: 12-ஆம் வகுப்பு வரை எனது கோடை விடுமுறையை கோவையில்தான் கழித்தேன். சூலூர், கவுண்டம்பாளையம் என இளையராஜா பாட்டைக் கேட்டுக்கொண்டு கிணற்றில் குதித்து விளையாடிய நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.

  • ஸ்கிரீன் டைம் குறைப்போம்: “நாம் அனைவரும் டிஜிட்டல் ஸ்கிரீன்களுடன் செலவிடும் நேரம் அதிகமாகிவிட்டது. நானும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், குடும்பத்துடனும் உறவுகளுடனும் செலவிடும் நேரம்தான் வாழ்நாள் நினைவுகளை உருவாக்கும். போனைப் பார்ப்பதை குறைத்து மனிதர்களுடன் பேசுங்கள்” என்ற அன்பான கோரிக்கையை முன்வைத்தார்.

  • ‘கருப்பு’ படத்தின் வெற்றி: ‘கருப்பு’ திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கும், வெளியீட்டுக்கு உறுதுணையாக இருந்த திரையரங்க உரிமையாளர்களுக்கும் நன்றி. படத்தின் 100-வது நாள் விழா விரைவில் நடைபெறவுள்ளது.

  • புதிய அடையாளம்: ‘விஸ்வநாத் & சன்ஸ்’ எனக்கு ஒரு புது அடையாளத்தைத் தரும். காதல், குடும்பம், காமெடி, ஹீரோயிசம் என அனைத்தும் நிறைந்த ஒரு ஃபேமிலி என்டர்டெய்னராக இது ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வருகிறது.

நண்பர்கள் தின வாழ்த்துகளுடன், “நம்பிக்கையுடன் பயணித்தால் வெற்றி நிச்சயம்” என்ற நேர்மறை எண்ணத்துடன் சூர்யா தனது உரையை நிறைவு செய்தார்.