32°C
விளம்பரம்
Advertisement

‘பியார் பிரேமா கல்யாணம்’: மாடர்ன் திருமணத்தின் ‘அட்ராசிட்டி’!

admin சேலம் Published: August 2, 2026 2 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



யக்குநர் இளன் இயக்கத்தில், அவரே முதன்முறையாகக் கதாநாயகனாகவும் அவதாரமெடுக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘அட்ராசிட்டி’ (Atrocity) அதிகாரப்பூர்வமாக வெளியாகி, சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சமீபத்தில் வெளியான புரோமோவே மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த முழுப் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

யுவன் இசையில் இளமைத் துள்ளல்

யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு இயக்குநர் இளன் மற்றும் வெங்கயோ இணைந்து வரிகளை எழுதியுள்ளனர். மதிச்சியம் பாலா, சிந்தூரி விஷால் மற்றும் வெங்கயோ ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். நவீன காலத் திருமணங்களில் நடக்கும் சுவாரஸ்யமான கலாட்டாக்கள் மற்றும் ‘அட்ராசிட்டி’களை நகைச்சுவை ததும்பக் காட்சிப்படுத்தியிருக்கும் இப்பாடல், துள்ளலான இசை, கவர்ச்சிகரமான காட்சியமைப்பு மற்றும் நாயகன்-நாயகியின் இயல்பான கெமிஸ்ட்ரியால் இளசுகளின் ஃபேவரிட் லிஸ்ட்டில் இணைந்துள்ளது.

வித்தியாசமான கதைக்களம்

இயக்குநர் இளனுக்கு ஜோடியாக சான்வீ மேக்னா கதாநாயகியாக நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்றோர் வீட்டை விட்டுச் செல்ல விரும்பாத மனைவியால், கணவரே மனைவியின் வீட்டிற்குச் சென்று வாழும் வழக்கத்திற்கு மாறான புதிய கதைக்களத்தை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் உறவுகளின் உணர்வுகளை முற்றிலும் புதிய கோணத்தில் பேச வருகிறது இத்திரைப்படம்.

நட்சத்திரப் பட்டாளம் மற்றும் தயாரிப்பு

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல் மற்றும் குடும்பக் கதைகளுக்குத் தனது இசையால் உயிர் கொடுக்கும் யுவன் சங்கர் ராஜா, இதில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் சிறப்புத் கவனம் செலுத்தியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 21 – நெட்ஃப்ளிக்ஸ் ஸ்ட்ரீமிங்

முதல் சிங்கிள் வெளியானதைத் தொடர்ந்து, படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு தொடங்கும் எதிர்பாராத திருப்பங்களையும், கலகலப்பான தருணங்களையும் சுவாரஸ்யமாகச் சொல்ல வரும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) தளத்தில் நேரடியாகச் வெளியாகிறது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்