சுறா படுத்தும் பாடு ; விஜய் ரசிகர்கள் மீது வழக்குப் பதிவு!

சுறா படுத்தும் பாடு ; விஜய் ரசிகர்கள் மீது வழக்குப் பதிவு!

பெண் பத்திரிகையாளர்  ஒருவரை அவதூறாக பேசியதாக நடிகர் விஜய் ரசிகர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இணையதள பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் சென்னை போலீசார் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தர்போதைக்கு நடிகர் விஜய் ரசிகர்கள் 2 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குபதியப்பட்டுள்ளது என்றும் சைபர் க்ரைம் மேலும் விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தி நியூஸ் மினிட் http://www.thenewsminute.com/ இணைய இதழ் நியூ?ஸ் எடிட்டரான் தான்யா ராஜேந்திரன் தான்யா அண்மையில் வெளியான ஷாரூக் கானின் படத்தை விமர்சிக்கும்போது சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘சுறா’ படத்தோடு ஒப்பிட்டு “விஜய்யின் சுறா படத்தை இடைவேளைவரைதான் பார்க்க முடிந்தது. ஷாரூக் கானின் ஜப் ஹாரி மெட் செஜால் படத்தில் இடைவேளை வரைகூட உட்கார முடியவில்லை” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து விஜய் ரசிகர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் களமிறங்கி தன்யாவை தனிப்பட்ட முறையில் தாக்கி ஆபாசமான ட்வீட்கள், முகநூல் பதிவுகள் என்று இணையத்தில் சேறு வாரி இறைக்கும் வேலையில் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

என்றைக்கோ வெளியான படத்தைப் பற்றி தான்யா எதிர்மறையாகச் சொல்லப்போக, அது அவருக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. ஆயிரக்கணக்கான ட்வீட்கள் அவருக்கு எதிராகப் பதிவிடப்பட்டுப் பகிர்ந்துகொள்ளப்பட்டு வருகின்றன. பாலியல் ரீதியாக மிகவும் தரக்குறைவாகத் தாக்கப்பட்டுவரும் தான்யா, இந்தத் தாக்குதல்களுக்கு எதிராகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தன்னை அபாசமாக வசைபாடி அவதூறு செய்த்தோடு அல்லாமல், “நேரில் வருகிறேன்” என்றும் சிலர் மிரட்டுவதால் புகார்கொடுக்க நேர்ந்தது என்று தான்யா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!