32°C
விளம்பரம்
Advertisement

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி!.

admin சேலம் Published: April 11, 2023 2 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



கடந்த வருடம் அக்டோபர் 2ம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த தமிழ்நாடு போலீஸ் துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு நாடிய நிலையில் 6 இடங்களைத் தவிர 44 இடங்களில் பாதுகாப்போடு உள்அரங்கு கூட்டமாக நடத்துவதற்கு ஐகோர்ட் தனி நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.ஆனால் அதை ஏற்க மறுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ஐகோர்ட் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடந்தது. அப்போது ஆர்எஸ்எஸ் தரப்பில், சட்டம் ஒழுங்கை காப்பது மாநில அரசின் கடமை, அதற்காக பேரணியை தடுப்பது நியாயமல்ல என்று வாதிடப்பட்டது. அதே நேரம் பிரச்சனைக்குரிய இடங்களில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என தமிழக போலீஸ் தரப்பு வாதிட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். மேற்கண்ட வழக்கில் இன்று நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீதிபதிகள் பிறப்பித்துள்ள தீர்ப்பில், “தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. சென்னை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது,” என்று தெரிவிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் பேரணி வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க்து.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்