ஒரே நாளில் 16 முறை புத்தாண்டு கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் குழு!
“விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினர் புத்தாண்டை கொண்டும்போது அவர்கள் 16 முறை சூரியோதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் பார்த்தார்கள். விண்வெளி மையம் புவியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் போது அவர்கள் சூரிய உதயத்தை காண முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விண்வெளி நிலையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கூறியிருப்பதாவது:–
“2024ம் ஆண்டு முடியும் போது எக்ஸ்ப்–72 குழுவினர் 16 முறையை சூரியோதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் கண்டாபார்கள். அதாவது, பூமிக்கு மேல 400 கி.மீ உயரத்தில் மிதந்து கொண்டிருக்கும் எக்ஸ்பெடிஷன் 72 குழுவினர், பூமியைச் சுற்றி வரும்போது 2025 பிறக்கும் தருணத்தில் 16 சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் கண்டதால் ஒவ்வொரு முறை புத்தாண்டாகக் கொண்டாடினார்கள் ” என்று குறிப்பிட்டுள்ளது.
![]()
சர்வதேச அளவில் முதலில் சூரிய உதயம் தெரியும் பகுதியாக கிழக்கு நியூசிலாந்து இருக்கிறது. இங்குள்ள கிரிட்டிமாட்டி எனும் தீவில் சூரிய உதயம் முதலில் தெரியும். அதன் பின்னர்தான் மற்ற பகுதிகளுக்கு தெரியும். அந்த வகையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இந்த தீவில் உள்ள மக்கள் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரிய நாடுகள், சீனா, இந்தியா என புத்தாண்டு கொண்டாடப்பட்டது.அதே நேரம் சர்வதேச விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ் சுமார் 16 முறை புத்தாண்டு சூரிய உதயத்தை பார்த்திருக்கிறார். அதாவது சர்வதேச விண்வெளி மையத்திலிருக்கும் அனைவராலும் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் சுமார் 16 முறை சூரிய உதயத்தை பார்க்க முடியும். இதற்கு காரணம் சர்வதேச விண்வெளி மையம் சுற்றும் வேகம்தான். இது மணிக்கு 28,000 கி.மீ வேகத்தில் பூமியை சுற்றி வருகிறது. இந்த வேகத்தில் சுற்றினால் 90 நமிடங்களில் பூமியை ஒரு ரவுண்டு அடித்துவிடலாம். அதனால்தான் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் எவராலும் 16 முறை சூரிய உதயத்தை பார்த்துவிட முடியும். அப்படித்தான் சுனிதா வில்லியம்ஸும் பார்த்திருக்கிறார்.
அதே சமயம் அறிவியலாளர்களை பொறுத்தவரை புத்தாண்டு என்பது கற்பனைதான். அதாவது, பூமி புள்ளி A என்கிற இடத்தில் தொடங்கி, சூரியனை ஒரு சுற்று சுற்றி மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர்வதைத்தான் புத்தாண்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால் விஞ்ஞானிகளை பொறுத்த வரை பூமி எப்போதுமே A என்கிற புள்ளியை மீண்டும் வந்தடையாது என்று கூறுகின்றனர். இதற்கான காரணம், சூரியன் நகர்வதுதான். மணிக்கு சுமார் 8.28 லட்சம் கி.மீ வேகத்தில் இந்த பால்வெளி அண்டத்தை சுற்றி வருகிறது. அது நகரும்போது அத்துடன் சேர்ந்து நம்மையும் இழுத்தக்கொண்டு நகர்கிறது. அப்படி இருக்கும்போது பூமி எப்படி மீண்டும் A என்கிற புள்ளிக்கு வரும்? இந்த அண்டத்தில் வழி சொல்ல நட்சத்திரங்களைதான் பயன்படுத்துவார்கள். சூரியனை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
டெயில் பீஸ்:
கடந்த ஜூன் மாதத்தில் விண்வெளி வீரர் பேரிவில்மோருடன் போயிங் ஸ்டார்லிங் விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் 9 நாட்களில் பூமிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில தொழில்நுட்பக் கோளாறுகளால் அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், கிறிஸ்துமஸ் பண்டிகையையும் அங்கேயே கொண்டாடினார். இதுபற்றிய விடியோ ஒன்றை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பகிர்ந்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரிவில்மோர் மார்ச் மாதத்தில் பூமிக்கு திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் பிப்ரவரியில் திரும்புவதற்குத் திட்டமிடப்பட்டனர். ஆனால், ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ–10 பணியின் தாமதம் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.
பேரி வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸுக்கு இரண்டு காலி இருக்கைகளுடன், க்ரூ-9 இன் இரண்டு விண்வெளி வீரர்கள் செப்டம்பர் மாத இறுதியில் விண்வெளி நிலையத்திற்கு வந்தனர். 2025ம் ஆண்டு பிப்ரவரியில் நால்வரும் வீடு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


