June 2, 2023

எங்கே சென்றார் உன் கடவுள்…..?

இன்று சண்டே என்பதால் தத்து பித்து – இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது – எங்கே சென்றார் உன் கடவுள்…..!?

எல்லா கோயில்களும், மசூதிகளும், சர்ச்சுகளும் இன்னும் பல இறைவழி கூடங்களும் சாத்தப் பட்டிருக்கின்றன………அவர் அவர் மத கடவுள்களிடம் இருந்து மனிதர்கள் தனிமை படுத்தப் பட்டிருக்கிறார்கள், வழக்கம் போல சில தற்குறிகள் எங்கே போனார் உன் கடவுள் என்ற தான் மனதின் பல நாள் அழுக்கை மெல்ல சவக்கரம் இல்லாமல் வெளுக்க நினைக்க உண்மை என்னவெனில்……..!?

எவ்வகை கடவுள் ஆயினும் அவர் அவர் நம்பிக்கைக்கு உட்பட்டதே, உன் தாயார் இவர் தான் உன் தந்தை என கூறியவாறு நீ தந்தையாக ஏற்று வாழ்க்கையை நடத்தும் நாட்களில் சிலர் வந்து இவர் உன் தந்தை அல்ல – இவர் ஒன்றுமே இல்லை – உன் பகுத்தறிவை உபயோகித்து பார் என்று கூறினால் அவர் கூறியதை ஏற்று ஓவர் நைட்டில் பகுத்தறிவாளனாய் உன் தந்தையை எப்படி நீ சந்தேகிப்பாயோ அது போல தான் இந்த கடவுள் மேட்டரும்…… உன்னை உன் நம்பிக்கையை கூட உன் சுய புத்தியால் டிசைட் செய்யமுடியாத ஒரு அபாக்யவதியா நீ என உன்னை நீனே கேட்டு பார் விடை தெரியும்……..

கொரோனாவில் இருந்து காப்பாற்ற முடியுமா உன் கடவுளாளனு சவால் விடும் எதோ ஒரு தற் குறிக்கு நீ தரும் ஒரே பதில் – ஆம் இன்று வரை நான் கொரோனா தொற்று இல்லாமல் இருக்கும் ஒரே காரணம் என் கடவுள் தான் என்று அடித்து கூறு….. கடவுளை நீ நம்பும் ஆளாய் இருந்தால்……..

ஏன் உன் கடவுள் உனக்கு தரிசனம் தராமல் கோயிலின் உள்ளே ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று கேட்டால் கூறு – கடவுள் தன்னை தனிமை படுத்தி கொண்டிருக்கிறாரே தவிர ஓடி ஒளியவில்லை…..அவருக்கு இருக்கும் சுய கட்டுப்பாடு கூட உனக்கு இல்லாமல் நீ தான் வீதியில் திரிகிறாய் என்று….

பின்பு என் பல மரணங்கள் – உன் கடவுள் உண்மை எனில் என் இவ்வாறு நடக்கிறது என்று கொக்கரிப்பவர்களுக்கு, உணர்த்து – இதை காண நீயும் நானும் இருக்கையில் இதில் என்ன சந்தேகம் கடவுள் உள்ளார்கள் என்று…..!.

எங்கே சென்றார் உன் கடவுள் என கேட்பவரிடம் கூறு – இன்னும் என்னை என் குடும்பத்துடன் இருக்க வைத்து இருப்பதே கடவுள் எங்கும் இருக்கிறார் என்பதே உணர்த்துக்கிறது, இதை விட அவர் என்ன செய்து விட முடியும் என்று………..

கடைசியில் அது கடவுளே அல்ல – வெறும் கல் தான் என்று சொல்பவர்களுக்கு – திரும்ப சொல் அது கல் தான் என்று உனது பகுத்தறிவு உணர்த்தும் போது அதை கல்லா கடவுளை என்பதை நான் டிசைட் செய்து கொள்கிறேன் அதில் உனக்கென அக்கறை என்று………..

உங்களுக்கு எது நம்பிக்கை ஊட்டுகிறதோ அதை செம்மையாய் செய்யுங்கள் – கொரோனவை விட கொடுமையான ஆட்களிடம் இருந்து தள்ளியே இருங்கள்…… STAY BLESSED