நம் நாட்டிலுள்ள 2 ட்விட்டர் அலுவலகங்கள் திடீர் மூடல்!

நம் நாட்டிலுள்ள 2 ட்விட்டர் அலுவலகங்கள் திடீர் மூடல்!

செலவினை குறைக்கும் நடவடிக்கையாக இந்தியாவிலுள்ள மூன்று ட்விட்டர் அலுவலகங்களில் 2 அலுவலகங்களை மூடிவிட்டு அதன் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட மூன்று இடங்களில் ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் செலவினை குறைக்கும் நடவடிக்கையாக டெல்லி, மும்பை அலுவலகங்களை டுவிட்டர் நிறுவனம் மூட முடிவு செய்து உள்ளது.

எனவே, இந்தியாவில் பெங்களூரு ட்விட்டர் அலுவலகம் மட்டுமே செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, மும்பையில் மூடப்பட்ட இரண்டு ட்விட்டர் அலுவலகத்தின் ஊழியர்களும் அலுவலகத்திற்கு வராமல் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு ஊழியர்களுக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!