தமிழ்நாடு முழுவதும் தொழிற் சாலைகளில் வேலை நிறுத்தப் போராட்டம்!

தமிழ்நாடு முழுவதும் தொழிற் சாலைகளில் வேலை நிறுத்தப் போராட்டம்!

மிழகத்தில் பீக் ஹவர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், மின்சார நிலைக் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், சோலார் பேனல் அமைக்க துணை கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொழிற் சாலைகளில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதனால் ரூ. 9 ஆயிரம் கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் பீக் ஹவர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், மின்சார நிலைக் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், சோலார் பேனல் அமைக்க துணை கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக ஏற்கனவே கடந்த 7ஆம் தேதி காரணம்பேட்டை பகுதியில் உண்ணாவிரத போராட்டமும், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் கடிதம் மற்றும் இமெயில் அனுப்பும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் இன்று தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக 25ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அதேபோல கோவையில் உள்ள தொழில் கூட்டமைப்பான தமிழ்நாடு தொழில் தொழில் அமைப்பினரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்தனர்.

தமிழக மின்வாரியம் சார்பாக உயர்த்தப்பட்டுள்ள 430 சதவீத நிலைக் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும், பரபரப்பு நேர கட்டணம், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் , மல்டி இயர் டாரிப் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் என்று உற்பத்தி நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதுகுறித்து தொழில் துறையினர் கூறுகையில், பொருளாதாரம் மந்த நிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, திறன்மிகு பணியாளர்களின் பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை தொழில்துறை சந்தித்து வருவதாகவும், கடந்த வருடம் அதிகப்படியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து இருப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து பலமுறை அரசிடம் முறையிட்டும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை எனவும், ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின் கட்டணம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை நிரந்தரமாக முடக்கிவிடும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார். மின் கட்டண உயர்வால் பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்து வருவதாகவும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.இதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் இன்று சுமார் 350 அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

CLOSE
CLOSE
error: Content is protected !!