மெக்சிகோவில் புயல்- காற்றுக்கு 27 பேர் பலி! உணவுக்காக கடைகளில் பொருட்களை சூறையாடும் மக்கள்!

மெக்சிகோவில் புயல்- காற்றுக்கு 27 பேர் பலி! உணவுக்காக கடைகளில் பொருட்களை சூறையாடும் மக்கள்!

சிபிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள மெக்சிகோவை ஓடிஸ் புயல் புரட்டிப்போட்டுள்ளது. குறிப்பாக பிரபல சுற்றுலா தலமான அகாபுல்கோவை புயல் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த பகுதியில் சுமார் 10 லட்சம் பேர் வாழ்கின்றனர். அகாபுல்கோ நகரில், மணிக்கு 230 கி.மீ வேகத்தில் பலத்த புயற்காற்று வீசியதால், அகாபுல்கோ நகரம் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. வீடுகள், மின்கம்பங்கள், வாகனங்கள், மரங்கள், மொபைல் டவர்கள் உள்ளிட்டவை கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் அங்கு உணவு கிடைக்காத பொதுமக்கள் கடைகளில் இருந்து பொருட்களை சூறையாடி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 230 கி.மீ. வேகத்தில், மெக்சிகோவை தாக்கிய மிகவும் சக்தி வாய்ந்த ஓடிஸ் புயலால் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மொத்த நகரையும் ஒடிஸ் புயல் புரட்டிப் போட்டுள்ளது. பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 80 வருடங்களில், அதாவது 1950-க்கு பிறகு இத்தனை வலுவான புயல் மெக்சிகோவில் வீசவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடிஸ் புயல் உருவான 12 மணி நேரத்திற்குள் கரையை கடந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரம் கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஓடிஸ் புயல் தாக்குதலில் அகாபுல்கோவில் 27 பேர் உயிரிழந்தனர். புயல் கரையை கடந்த பகுதிகளில் தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அதே போல், மின்கம்பங்கள் அனைத்தும் விழுந்து விட்டதால், மின் விநியோகம் சீராக சில நாட்களாகும் என்று கூறப்படுகிறது.இதனிடைய மெக்சிகோ அரசு போதிய உதவிகளை செய்யாததால் உணவு மற்றும் குடிநீர் இன்றி அந்நகர மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பல மில்லியன் டாலர் அளவிற்கு சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், உணவு மற்றும் குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் அங்குள்ள கடைகளில் இருந்து உணவுப் பொருட்களை பொதுமக்கள் சூறையாடி வருகின்றனர். கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த உணவு மற்றும் அடிப்படை தேவைக்கான பொருட்களை மக்கள் எடுத்துச் சென்று வருகின்றனர். ஏடிஎம்களில் பணம் வருவதில்லை என குற்றம் சாட்டியுள்ள மக்கள், பணம் இருந்தாலும் பொருட்கள் எதுவும் கிடைக்காத நிலையே நிலவுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இது போன்ற இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரே மேனுவல், மக்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு உடனடியாக தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரும் எனவும், மீட்பு பணிகள் விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் ஓடிஸ் சூறாவளி ஏற்படுத்திய காற்று மற்றும் கனமழையால் சிறு விவசாயிகளின் மக்காச்சோள பயிர்கள் முற்றிலும் நாசமாகிவிட்டன. ஓடிஸ் சூறாவளி சேதப்படுத்திய பகுதியில் மின்சாரத்தை மீட்டெடுப்பது முதன்மையானது உள்ளது. சூறாவளியால் 27 பேர் இறந்ததற்கு வருந்துகிறோம். இதுவே மிகவும் வேதனை அளிக்கிறது. சூறாவளியால் ஏற்பட்ட அழிவைக்கட்டுப்படுத்த மெக்சிகோ அதிகாரிகள் இன்னும் பணியாற்றி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்

error: Content is protected !!