நம்ம புதுயுகம் தொலைக் காட்சியில் “ருசிக்கலாம் வாங்க”- சீசன் 2!

நம்ம புதுயுகம் தொலைக் காட்சியில் “ருசிக்கலாம் வாங்க”- சீசன் 2!

ணவு என்பது நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்று. நாம் சாப்பிடும் உணவுக்கும் நம் மனநிலைக்கும் நிறைய தொடர்பு இருக்கின்றன. ஒவ்வொரு உணவும் நமக்கு தேவையான எனர்ஜியை தருகின்றன. ஆனால், நாம் நீண்ட நாள் வாழ வேண்டுமானால், எனர்ஜி மட்டும் போதாது . ஆரோக்கியமும் தேவை. அனைவரிடமும், “நீங்கள் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுகிறீர்களா? ” என்று கேட்டால், எல்லோரும் ஆமாம் என்றுதான் சொல்லுவார்கள். இன்றைய சூழலில் ஆரோக்கியமான உணவு என்பது முற்றிலும் மாறிவிட்டது.

ஆரோக்கியமான உணவு என்றால், நாம் தினமும் சாப்பிடும் உணவில், காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்ப்பது அல்ல. நாம் எந்த அளவு சாப்பிடுகிறோம், எப்போது சாப்பிடுகிறோம், என்ன சாப்பிடுகிறோம் போன்று எல்லாவற்றையும் கொண்டு இருக்கிறது. தினமும் மூன்று வேளை சாப்பிடுகிறோமா? அல்லது தேவையான நேரத்தில் சாப்பிடுகிறோமா? ருசியான உணவை சாப்ப்பிடுகிறோமா? நம் அனைவருக்குமே வெவ்வேறு பழக்கவழக்கங்கள், பாரம்பரியங்கள் இருக்கின்றன. அவை அனைத்துமே ஆரோக்கியமான மற்றும் ருசியான உணவு முறையை தான் சொல்லி தருகின்றது. ஆனால், காலச்சுழலின் காரணமாக, நம் அனைவரின் உணவு பழக்கங்களும் மாறி வருகின்றன. இந்தப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்பவே நம்முடைய ஆரோக்கியமும் மாறி வருகிறது. நாம் உண்ணும் உணவில், ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சத்துகள் இருக்கின்றன. நம் மனித உடலுக்கு இந்த அத்தனை சத்துகளுமே குறிப்பிட்ட விகிதத்தில் இருக்க வேண்டும். எப்போதும் ஒரே மாதிரியான உணவுகளை உண்டுகொண்டு இருக்காமல் ஊட்டச்சத்து நிறைந்த பல்வேறு வகையான உணவுகள் உண்ணலாம்.

இதை எல்லாம் கவனத்தில் கொண்டு உருவாகி பல லட்சம் மனங்களை கொள்ளைக் கொண்டு ஆயிரம் எபிசோட்களை கடந்து புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ருசிக்கலாம் வாங்க’ நிகழ்ச்சி புத்தம் புதிய அரங்கில் புதுப்பொலிவுடன் ருசிக்கலாம் வாங்க சீசன் -2 வாக திங்கள் முதல் வெள்ளிகிழமை வரை மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை  மீனாட்சி தொகுத்து வழங்குகிறார்.

பிரபல சமையல் கலைஞர் யோகாம்பாள் சுந்தர் மற்றும் முன்னணி சமையல் கலைஞர்கள் பங்குபெறும் பாரம்பரிய உணவு வகைகள் முதல் பாஸ்புட் உணவு வகைகள் வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமையல் கலைஞர்கள் பங்கு பெறுகின்றனர். யோகாம்பாள் சுந்தர் பாரம்பரிய உணவு வகைகளையும், மற்ற முன்னணி சமையல் கலைஞர்கள் விதவிதமான சைவம், அசைவம் என நாவில் ருசி ஏற்படுத்தும் புது வகையான உணவு வகைகளையும் தயாரித்து காட்டுகின்றனர்.

இது மட்டுமின்றி அன்றாடம் உபயோகிக்கும் உணவு பொருட்களை பற்றிய நீங்கள் அறியாத விஷயங்களையும் சுவாரசியமான சமையல் குறிப்புகளும் இடம் பெறும்.

error: Content is protected !!