சீமான் வீட்டில் TRESPASS செய்த ஸ்டாலின் போலீஸ்!.

சீமான் வீட்டு முன்பாக இன்று நடந்த சம்பவம், ஒரு அத்துமீறல்- TRESPASS. முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட ஒன்று.இதை இப்படித்தான் முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டுள்ளார்கள்.வீடியோ ஆதாரங்களின்படி அப்படி பார்க்க முடிகிறது.சம்மனை ஒட்ட வந்தது வளரசவாக்கம் போலீஸ். சீமான் வீடு நீலாங்கரை ஏரியா என்பதால் அந்த சரகத்தைச் சேர்ந்த காவலர்கள் உடன் இருந்திருக்கலாம்.தவறில்லை. வந்தார்கள், சம்மனை ஒட்டினார்கள். புகைப்படம் எடுத்தார்கள், சாட்சிகளை கூறிவிட்டு கிளம்பினார்கள். அவ்வளவுதான், சட்டப்படி அவர்களின் வேலை முடிந்தது.அதன் பிறகு கடும் மழைவந்து, நனைந்து கிழிந்தாலோ, அந்த பகுதியில் மாடு வந்து கிழித்து சாப்பிட்டாலோ, அல்லது யாரோ சிலர் வந்து கிழித்திருந்தாலோ, காவலர்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல. அவர்களிடம் சாட்சியம் இருக்கின்றது. அவ்வளவே. அதற்காக அந்த வீட்டு வாசல் முன்பாக அந்த ஒட்டப்பட்ட சம்மனுக்கு காவல் காத்துக்கொண்டிருக்க முடியாது.
சொன்னபடி அடுத்த நாள் பிப்ரவரி 28–ம் தேதி, சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வரவில்லை என்றால், சட்டப்படி அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பதை காவல்துறை எடுக்க வேண்டிய முடிவு. சீமானை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதா, அல்லது நீதிமன்றத்தை நாடி, சம்பந்தப்பட்ட நபர் சம்மனை மதிக்கவில்லை, அடுத்து என்ன செய்யட்டும் என கேட்டு–நீதிமன்றம் உத்தரவின் பேரில் சீமானை கைது செய்யலாம். இதில் உள்ள விடயம் அவ்வளவே. ஆனால் இங்கே நடந்திருப்பது முற்றிலும் வேறானது.
சம்மன் கிழிக்கப்பட்டதாக அறிந்த நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் அங்கே வாகனத்தில் சென்று இறங்குகிறார். இறங்கி கெத்தாக நடந்து, (அந்த நடையே ஏதோ ஒரு முடிவு என்பதை காட்டுகிறது) வீட்டு வாசல் முன்பு போய் நிற்கின்றார்.சீமான் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகாரியாக நின்றிருந்த முன்னாள் ராணுவ வீராரான அமல்ராஜ்,வீட்டின் கேட்டை கொஞ்சமாக திறந்து வைத்துக்கொண்டு ஏதோ பதில் சொல்ல முற்படுவதற்குள், போலீஸ் இன்ஸ்பெக்டர பிரவீன் ராஜேஸ் அவரது சட்டை காலரை இறுக்கிப் பிடித்தபடி உள்ளே தள்ளிக்கொண்டு செல்கிறார். கூடவே இரண்டு சாதாரண உடையில் இருந்த நபர்களும் அவருக்கு துணையாக தள்ளிக் கொண்டு செய்கிறார்கள்.
இன்ஸ்பெக்டர் வீடியோ எடுப்பதை அறிந்து சுதாரித்துக் கொண்டு அவர்களை மிரட்டும் தொனியில் வெளியே செல்லுமாறு எச்சரிக்கின்றார்.இது முழுக்க முழுக்க ஒரு அத்துமீறல்.உதயநிதி வீட்டிலேயோ, அல்லது மற்ற கட்சி தலைவர்கள் வீட்டிலேயோ போலீஸ் இப்படி நுழைந்து விட முடியாது. நுழையமாட்டார்கள். ஆனால் சீமான் வீடு என்பதற்காகவும், பொய் சம்பவத்தை உருவாக்கி சலசலப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவுமே இப்படி செய்திருக்கிறார்கள்.தவிர, அந்த முன்னாள் ராணுவ வீரர் எங்கேயும் எதிர்தாக்குதல் நடத்தவே இல்லை. துப்பாக்கியை எடுத்து காட்டி மிரட்டவும் இல்லை. தன்னை தற்காத்துக் கொள்ள–தடுப்பு நடவடிக்கையாக மட்டுமே, தடுக்கின்றார், அவர் யாரையும் அடிக்கவில்லை. காரணம், இன்ஸ்பெக்டர் உடன் வந்திருக்கும் அந்த இரண்டு நபர்களும் அவருக்கு யார் என்றே தெரியாது.போலீஸ் உடையில் இல்லை. தன்னை நெருங்கி, தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து, தவறாக பிரயோகம் செய்துவிட்டால், பதில் சொல்ல வேண்டியது துப்பாக்கியை வைத்திருந்த அமல்ராஜ்தான். அதற்காகவே அவர் எதிர்வினையாற்றுகிறார்.
ஆனால் அந்த காவல் ஆய்வாளரும், உடனிருந்த இரண்டு பேரும் அவரை வலுக்கட்டாயமாக பிடித்து, பலவந்த பிரயோகத்துடன் இழுத்து வந்து வாகனத்தில் ஏற்றி சென்றார்கள், அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிக்கின்றார்கள். இது சட்டப்படி தவறா? என்றால் தவறுதான். ஒரு வீட்டிற்கு காவல் பொறுப்பேற்றிருந்த முன்னாள் ராணுவ வீரரை, காரணமே இல்லாமல் இப்படி இழுத்து சென்றிருக்கக் கூடாது.அவரிடம் இருந்த துப்பாக்கியை ஒரு சாதாரண உடை நபர்கள் கைப்பற்றும் படி செய்திருக்கக் கூடாது.இது பற்றி முன்னாள் ராணுவ வீரர்களின் நலச்சங்க இயக்குநரகத்திற்கு புகார் அளிக்கப்பட உள்ளது. தவிர தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட உள்ளது. கிடைத்திருக்கும் வீடியோ ஆதாரங்களின் படி, அந்த முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜ் துப்பாக்கியை கையில் எடுத்து தவறான பிரயோகம் செய்தபடி ஏதுமே இல்லை. பிறகு ஏன் அவர் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு, பொய் வழக்கில் கைது செய்தார்கள். இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.ஆக சீமான் மீது ஏதோ ஒரு இலக்கு வைத்து காய் நகர்த்துகிறார்கள். அதற்கு முன்னோட்டமாக இப்படி அத்துமீறி உள்ளே நுழைந்து சாசகத்தை நிகழ்த்தியிருக்கின்றது ஸ்டாலின் போஸீஸ்.
குறிப்பு: சன் டிவியும் போலீசும் மட்டுமே போதும் என்று நினைக்கும் மாடல் அரசு நீதிமன்றம் இருப்பதை மறந்து விட்டது.