யூடியூப்பில் பிரத்யேக ஆன்லைன் விளையாட்டுகள்?.

யூடியூப்பில்  பிரத்யேக ஆன்லைன் விளையாட்டுகள்?.

ம் நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் வரை பலரும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பல்வேறு மனநலச் சிக்கல்களை ஏற்படுத்துவதோடு, பெருமளவிலான குற்றங்களுக்கும் வழிவகை செய்கிறது.

இந்தியாவில், ஆன்லைன் கேமில் ஈடுபடும் 60 சதவீதமானோர் 18 முதல் 24 வயதுடையவர்களே. ஊரடங்கில், பேடிஎம்-ன் மொபைல் கேமிங் செயலியான Paytm First Games செயலியை பயன்படுத்துவபவர்களின் எண்ணிக்கை மட்டும் 200 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே ஆன்லைன் விளையாட்டுகளை நேரடியாக ஒளிபரப்புவதில் ஏற்கனவே பிரபல யூடியூபர்கள் சாதனை படைத்து வருகின்றனர். பல்வேறு தலைப்புகளிலான வீடியோ ரகங்களில், இந்த ஆன்லைன் விளையாட்டுகளை அப்படியே ஸ்ட்ரீமிங் செய்கிறார்கள். யூடியூபில் அதிகரித்து வரும் ஆன்லைன் விளையாட்டு மோகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, நேரடி ஆன்லைன் விளையாட்டுகளை வெளியிட யூடியூப் முடிவு செய்திருக்கிறது.

இளம் தலைமுறையினர் மத்தியிலான ஆன்லைன் விளையாட்டு மோகத்தை அறுவடை செய்யும் நோக்கில், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் பல்வேறு விளையாட்டுகளை தங்கள் படைப்புகளின் அங்கமாக சேர்த்துள்ளன. இந்த வரிசையில் யூடியூபும் சேர உள்ளது. முதல் கட்டமாக ‘பிளேயபல்ஸ்’ என்ற ஆன்லைன் விளையாட்டுக்கான தயாரிப்பை உருவாக்கி, தனது பணியாளர்களை அழைத்து விளையாடச் செய்திருக்கிறது.

இதன்பொருட்டு யூடியூப் நிறுவனம் அனுப்பிய மெயில் வெளியே கசிந்ததில், இந்த விவகாரம் வெளிப்பட்டிருக்கிறது. மற்றபடி ஆன்லைன் விளையாட்டு அறிமுகம் தொடர்பான சகலத்தையும் யூடியூப் ரகசியமாகவே வைத்திருக்கிறது. இவற்றை நேரடியாக இணையதளம் மூலமாகவோ அல்லது மொபைல் மூலமாகவோ அணுகி விளையாட முடியும். யூடியூப் தளத்தில் குறைந்து வரும் விளம்பர வருவாயை ஈடு செய்வதற்காக, இந்த ஏற்பாட்டினை யூடியூபின் தாய் நிறுவனமான கூகுள் முன்னெடுத்துள்ளது.

சர்வதேச அளவில்  560 மில்லியன் இணையதள பயன்பாட்டாளர்களை கொண்டுள்ள இந்தியா, ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் மூலம், ஆன்லைன் கேமிங்கிற்கான செயலிகளை பதவிறக்கம் செய்யும் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக இருக்கும் சூழலில் யூ ட்யூப்பின் இந்த செயலில் இந்திய இளைஞர்களின்செயல்திறன் மேலும் பலவீனமடைய வாய்ப்பு உள்ளது

error: Content is protected !!