சிவகார்த்திகேயன் – மக்கள் ஸ்டாரா? அல்லது இளம் சூப்பர் ஸ்டாரா? ?

சிவகார்த்திகேயன் – மக்கள் ஸ்டாரா? அல்லது இளம் சூப்பர் ஸ்டாரா?  ?

தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடிக்கும் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ திரைப்படம் ஜூன் 16-ஆம் தேதி வெளியிடப்ப டுகிறது. ரேஷ்மா ரத்தோர் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் கருணாகரன், பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், மனோபாலா, யோக்ஜேபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிதார் இசை கலைஞனின் வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்களுடன் கூடிய நகைச்சுவை கலந்த பயணமே கதை.

கற்பனை காட்சிகள் என்றாலும் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நடந்த ஏதாவது ஒரு சம்பவத்தை இது ஞாபகப்படுத்தும். டி.இமான் இசையில் யுகபாரதி பாடல்கள் புதுவித அனுபவம் தரும் விதமாக இருக்கும். ‘ஏனடி நீ என்னை இப்படி..’ பாடலை இதுவரை 33 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இமான் இசையில் உருவாகி உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், கே.எஸ்.ரவிக்குமார், பொன்வண்ணன், பேரரசு, எஸ்.வி.சேகர், ஏ.எல்.விஜய், டி.இமான், பிரபு சாலமன், மனோபாலா, தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசும் போது, சிவகார்த்திகேயனை “இளம் சூப்பர் ஸ்டார்” என அழைத்தார். இயக்குநர் பேரரசு பேசும் போது, சிவகார்த்திகேயனை “மக்கள் ஸ்டார்” என பாராட்டினார்.

படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை வெளியிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் போது,” பட்டம் எல்லாம் நமக்கு தேவையில்லை. சாதாரண மனிதனாக மக்களை மகிழ்வித்தாலே போதும்” என்று பேசினார்.

மேலும் நடிகர் உமாபதி அதிக உயரமாக இருக்கிறார். அவரது உயரத்திற்கு அவர் ஆடும் பாடல் காட்சிகள் ஹிரித்திக் ரோஷனை நியாபகப்படுத்தும்படி இருக்கிறது. அந்த அளவுக்கு அவர் சிறப்பாக நடனமாடி இருக்கிறார் என்று டிரெய்லரை பார்க்கும் போதே தெரிகிறது என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார். படம் வருகிற 16-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

Related Posts