உலகின் மிகச்சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்!

உலகின் மிகச்சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்!

இன்றுவரை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா பேரிடருக்குப் பின்னர் விமான பயணங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விமான நிறுவனங்கள் பயணிகளை ஈர்ப்பதற்காக புதிய புதிய சலுகை மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், உலகின் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலை ஸ்கை டிராக்ஸ் எனும் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

 

2023ஆம் ஆண்டின் தலைசிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர் நாட்டின் ஷாங்கி விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. ஷாங்கி விமான நிலையம் சிறந்த விமான நிலையம் என்ற பெயரை பெற்றிருப்பது இது 12வது முறை என்பது சிறப்பு. சிங்கப்பூரின் முக்கிய பகுதியில் 17.2 கிமீ வடக்கிழக்கில் அமைந்த இவ்விமான நிலையம் தென்கிழக்கு ஆசியாவின் முக்கியமான வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். ஆசியாவின் ஆகச் சிறந்த விமான நிலையம், உலகின் ஆகச் சிறந்த பொழுதுபோக்கு வசதிகளைக் கொண்ட விமான நிலையம், சிறந்த உணவகங்களைக் கொண்ட விமான நிலையம் ஆகிய விருதுகளையும் சாங்கி விமான நிலையத்திற்கு வழங்கப்பட்டது.

சிங்கப்பூர், ஷாங்கி விமான நிலையம் 13 சதுக்க கிமீ பரப்பளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கருடா இந்தோனேசியா, மற்றும் வேறு சில விமான நிறுவனங்கள் இந்த விமான நிலையத்தை அடித்தளமாக கொண்டு இயங்கி வருகின்றன . இந்த விமான நிலையம் ஏற்கனவே 2009, 2010 மற்றும் 2011 ஆண்டுகளுக்கான சிறந்த விமான நிலையமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து, தோஹா விமான நிலையம், டோக்கியோவின் ஹனீடா விமான நிலையம், சியோலின் இங்கியோன் விமான நிலையம், பாரீஸின் சார்லஸ் டி கெல்லி விமான நிலையம் ஆகியன சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அதற்கடுத்தடுத்த நிலையில், இஸ்தான்புல், முனிச், சூரிச், நரிட்டா உள்ளிட்ட விமான நிலையங்கள் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விமான நிலையம் 36 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

error: Content is protected !!