உலகின் ‘சொகுசு ரயில்’ என அழைக்கப்படும் ‘ஷிகி ஷிமா’ ரயில் சேவை தொடங்கியாச்சு!

உலகின் ‘சொகுசு ரயில்’ என அழைக்கப்படும் ‘ஷிகி ஷிமா’ ரயில் சேவை  தொடங்கியாச்சு!

பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட ”ஷிகி ஷிமா” என்ற சொகுசு ரயில் சேவையை ஜப்பான் நேற்று ஆரம்பித்தது.ஜப்பானின் இந்த ஷிகி ஷிமா ரயில், உலகின் சொகுசு ரயில் என அழைக்கப்படுகிறது.ரயில்வே துறையில் உலகளவில் முன்னிலையில் விளங்கும் ஜப்பானின் புல்லட் ரயில் உலகப்புகழ் பெற்றவை. இந்நிலையில், பொழுதுபோக்கு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட ஷிகி ஷிமா ரயில் சேவையை ஜப்பான் அரசு தொடங்கியுள்ளது.

rail may 3a

10 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இருந்து வட கிழக்கு தீவு நகரான ஹோக்கைடோ வரை இயக்கப்படுகிறது.

மரக்கட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பறைகள், சொகுசு சோபாக்கள் போன்ற பல்வேறு வசதிகள் அடங்கிய இந்த ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என ஜப்பான் ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒரு முறை பயணம் செய்ய 34 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இந்த ரயிலில் 2 பெரிய அறைகள் உட்பட மொத்தம் 17 அறைகள் உள்ளன. பயணிகளுக்கு உதவும் வகையில் பணிப்பெண்கள் பணி புரிகின்றனர். பியானோ இசைக்கருவி இசைக்கும் வசதியும் இதில் உள்ளது.

இந்த ரயிலில் 10 பெட்டிகள் உள்ளன. நீளமான கண்ணாடி ஜன்னல்கள், மரக்கட்டைகளால் செய்யப்பட்ட வரவேற்பறைகள், சொகுசான சோபாக்கள், 5 ஸ்டார் ரெஸ்ட்ரான்ட், டைனிங் ஹால், பெட்ரூம், பொழுது போக்கும் அம்சங்கள் என பல்வேறு சொகுசு வசதிகளுடன் கூடிய இந்த ரயிலில, மலைகளையும், கடல் வெளிகளையும் ரசித்துக் கொண்டே பயணம் செய்யலாம். பயணிகளுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என ஜப்பான் ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எத்தனை பேர்

ஒருமுறை பயணம் செய்ய, 34 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 2 பெரிய ரூம் உள்பட மொத்தம் 17 ரூம்கள் உள்ளன. பயணிகளுக்கு உதவும் வகையில் பணிப்பெண்கள் பணிபுரிகின்றனர். ‘பியானோ’ இசைக்கருவி இசைக்கும் வசதியும் இதில் உள்ளது.

கட்டணம்

இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு குறைந்தபட்சம் கட்டணம், ஒரு நபருக்கு 1.8 லட்சரூபாய். அதிகபட்சம் 6.4 லட்ச ரூபாய். 2018 மார்ச் வரை ஏற்கனவே முன்பதிவு முடிந்து விட்டது.

இந்த ரயில், ஜப்பானின் மற்ற ரயில்களைப் போல வேகமாக செல்லாமல், மணிக்கு 110 கிலோமீட்டர் என்ற குறைந்த வேகத்திலேயே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

7c4b9184c95efa92b21a13714ef53bb0243a6ad7 68e87a3f63b245ecbd1000d9fb2635d01b99997a 82c29baffda3dc647fa91eaaf47e3df7918c18eb  c7bd46479a51ffa7ef1c058ba3a88415651fcfc4 e441696ba51225d0bdb3d2a8c5f82a521f5357dd

b758c26618efb11af501524724fe17e4d243f1e5