தமிழ் குரல் / AI Voice
SBI வங்கி சேமிப்புக் கணக்குகளில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகையை இருப்பு வைத்திராத வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் கட்டணங்களை மறுபரிசீலனை செய்ய அந்த வங்கி முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக மூத்தகுடிமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கலாமா என்பது குறித்து நிர்வாக அளவில் விவாதிக்கப்படவுள்ளதாக SBI தெரிவித்துள்ளது.
பெருநகரங்களில் உள்ள கிளைகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் மாதந்திர சராசரியாக 5 ஆயிரமும், கிராமப்புற பகுதி கிளைகளில் 1000 ரூபாயும் வைத்திருக்க வேண்டும்.
குறைந்தபட்ச தொகையில் 75 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பு வைத்திருப்பவர்களுக்கு 100 ரூபாயும், 50 சதவீதத்திற்கு குறைவாக வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக 50 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் இந்த கட்டணம் முறையே 20 மற்றும் 50 ரூபாயாக உள்ளது.
