ஆர்.எம்.வீ: தி கிங்மேக்கர்- அருளாளர் ஆர்.எம்.வீரப்பன் குறித்த ஆவணப் படம்!

ஆர்.எம்.வீ: தி கிங்மேக்கர்- அருளாளர் ஆர்.எம்.வீரப்பன் குறித்த ஆவணப் படம்!

திராவிட இயக்கங்களின் தலைவர்களான பெரியார் மற்றும் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆர்.எம். வீரப்பன். திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்த ஆர்.எம்.வீரப்பன், தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்தபோது அதிமுகவில் இணைந்தார். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 5 முறை அமைச்சராக பதவி வகித்தவர் அருளாளர் ஆர்.எம். வீரப்பன். 

மூன்று முறை சட்டப் பேரவை மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார் அருளாளர் ஆர்.எம். வீரப்பன். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 1977 முதல் 1996 வரையிலான காலக்கட்டத்தில் 5 முறை தமிழக அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் திரைத்துறையில் 20-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நடிப்பில் ‘தெய்வத்தாய்’, ‘காவல்காரன்’, ‘நான் ஆணையிட்டால்’, ‘ரிக்ஷாகாரன்’, ‘இதயக்கனி’ மற்றும் ரஜினி நடிப்பில் ‘மூன்று முகம்’, ‘பாட்ஷா’ முதலான பல ப்ளாக் பஸ்டர் படங்களை வழங்கியுள்ளார்.

தமிழகத்தின் வரலாற்றில் இடம் பிடித்த ஆளுமையான அருளாளர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், அவரைப் பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும் வருங்கால சந்ததியினர் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில், உலகத் தரத்தில் ஒரு ஆவணப் படம் உருவாகியுள்ளது.

தமிழக அரசியலிலும் சினிமாவிலும் சகாப்தங்களை உருவாக்கிய ‘அருளாளர்’ ஆர்.எம். வீரப்பன் அவர்களின் வாழ்வியலை விளக்கும் ஆவணப்படம் இது.


முக்கிய அம்சங்கள்:

  • அரசியல் பயணம்: தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் வழியில் தொடங்கி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய தூணாக விளங்கியவர்.

  • சினிமா புரட்சி: ‘சத்யா மூவீஸ்’ மூலம் திரைத்துறையில் புரட்சி செய்தவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற உச்ச நட்சத்திரங்களின் திரைப்பயணத்தில் முக்கிய பங்காற்றியவர்.

  • பங்களிப்பு: இலக்கியம், பகுத்தறிவு மற்றும் சிறந்த நிர்வாகத் திறமை மூலம் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள்.

சிறப்பு விருந்தினர்கள்:

இந்த ஆவணப்படத்தில் ஆர்.எம்.வீ அவர்களுடனான நினைவுகளைப் பகிர்பவர்கள்:

  • மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

  • நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், சரத்குமார்

  • இசைஞானி இளையராஜா, கவிப்பேரரசு வைரமுத்து

  • விஞ்ஞானி நம்பி நாராயணன் மற்றும் பல ஆளுமைகள்.

இயக்கம்:

பினு சுப்ரமணியம் அவர்கள் இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். ஆழ்ந்த ஆராய்ச்சி மற்றும் அரிய வரலாற்று ஆவணங்களுடன், ஆர்.எம்.வீ அவர்களின் பிறப்பிடத்திற்கே சென்று தகவல்களைச் சேகரித்து நேர்த்தியாக உருவாக்கியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!