வ.உ.சி.யின் இறுதிக் கால வறுமை நினைவுகள்!

வ.உ.சி.யின் இறுதிக் கால வறுமை நினைவுகள்!

ப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் இறுதி காலம் குறித்து பெரும்பாலான மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போனது வருந்தத்தக்கது. தமிழனுக்கே உரியதாக சொல்லப்படும் தன்மான உணர்வை உண்மையிலேயே கொண்டிருந்த திரு வ.உ.சி அவர்கள் சுதேசி கொள்கையைமுன்னெடுக்கும் விதத்தில் உருவாக்கிய சுதேசி கப்பல் தொழிலும் நலிவடைய, போராட்டத்தின் காரணமாக சிறை சென்றதால் வழக்கறிஞராக பணியாற்றவும் தடைவிதித்தது ஆங்கில அரசு.

1908 ஆம் ஆண்டு சிறை சென்ற வ.உ.சி அவர்கள் 1912 டிசம்பர் மாதம் விடுதலையானார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், பெரம்பூர், என பல்வேறு இடங்களில் குடியேறினார்.

சென்னை, கோவை, ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, தூத்துக்குடி, என பல்வேறு ஊர்களில் வாழ்ந்து பார்த்தார்.ஆனால் வறுமை அவரை வாழ விடவில்லை..

சிந்தாதிரிப் பேட்டையில் ஒரு சிறிய வீட்டில் தன் மகளோடு குடியேறினார்.ஒரு சிறிய மளிகை கடையை துவங்கி நடத்தினார். வியாபாரம் குறிப்பிடும் படி இல்லாமல் போகவே வீடு வீடாக சென்று மளிகை பொருட்களின் தேவையை பட்டியல் (லிஸ்ட்) எடுத்து வந்து தன் மகளின் உதவியோடு அந்தந்த வீடுகளுக்கு விநியோகம் செய்து அதில் கிடைத்த சொற்ப தொகையில் வாழ்ந்து வந்தார்.

அரிசி விற்றார், மண்ணெண்ணெய் விற்றார், ஆனால் தன்மானத்தை விற்கவில்லை.யாரிடமும் கையேந்தவில்லை.

சுயராஜ்ய நிதியிலிருந்து திலகர் மாதந்தோறும் அனுப்பி வைத்த 50 ரூபாய் அவருக்கு ஓரளவு உதவியாக இருந்தது.

தென் ஆப்ரிக்க தமிழர்கள் இதனை கேள்வி பட்டு ஒரு தொகையை வ.உ.சி யிடம் சேர்க்குமாறு காந்தியிடம் கொடுத்தனுப்பினர்.ஆனால் ஏனோ அது வ.உ.சி-க்கு வந்து சேரவில்லை.

“இப்போது இருக்கும் நிலையில் அந்த பணம் வேண்டாம் என்று நான் சொல்லப்போனால் அது நான் எனக்கும் என் குடும்பத்தார்க்கும் இழைத்த தவறாகிவிடும் “-என்று வெட்கத்தை விட்டு காந்திக்கு கடிதம் எழுதும் அளவிற்கு வ.உ.சி இருந்தார்..1

வாழ்வின் கடைசி நாள் சாகும் தறுவாயில் தேவாரம் , திருவாசகம் கேட்கலாமே என்று அவருக்குத் தோன்றவில்லை. மரணத்தை எதிர்பார்த்த அவர் அங்கிருந்தவரிடம் பாரதியின் ” என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ” பாடலை பாடச் சொன்னார். பாடலைக் கேட்டுக் கொண்டே அவரின் உயிர் பிரிந்தது.எல்லோரும் சேர்த்து வைத்த சொத்தை யார் யாருக்கு சேரவேண்டும் என்பதாக உயில் எழுதி வைப்பார்கள். வ.உ.சி. எழுதிய உயில் வித்தியாசமாக இருந்தது.எந்தவிதமான சொத்துக்களும் இல்லை என்பது மட்டுமல்ல தான் யார்யாருக்கு கடன் கொடுக்க வேண்டும் என எழுதியிருந்தார். வீட்டு வாடகை பாக்கி ரூ.135, துணிக்கடை பாக்கி ரூ.130 , எண்ணெய்க்கடை பாக்கி ரூ.30, சில்லரைக்கடன் ரூ.50 , தனி நபர் கடன் ரூ.80 என்பதாக எழுதி வைத்திருந்தார்.நாட்டிற்க்காக குடும்பத்தையும் சொத்துக்களையும் இழந்த தியாகிகளைக்கொண்டாடாமல் வேதசாரிகளையும் பதவிப்பித்தர்களையும் தேசத்தலைவர்களாக கொண்டாடியது காங்கிரஸ். என்னைப் பொறுத்தவரை இவரும் நம் தேசிய கடவுள் தான்!!

error: Content is protected !!