ரெஜினா விமர்சனம்!

ரெஜினா விமர்சனம்!

காதலில் விழுந்தேன்‘ என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான சுனைனா அதிரடி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ரெஜினா. இதை ‘பைப்பின் சுவத்திலே பிரணாயம்’, ‘ஸ்டார்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய மலையாள இயக்குனர் டொமின் டி சில்வா டைரக்ட் செய்து இருக்கிறார். இப்படத்திற்கு இசையமைத்துள்ள சதீஷ் நாயர் தான் இப்படத்தை தயாரித்துள்ளார். இதில் சுனைனா உடன் ஆனந்த் நாக், சாய் தீனா, ரித்து மந்திரா, அப்பானி சரத், விவேக் பிரசன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

மாவோயிஸ்ட் அப்பா ஆதரவில் வாழ தொடங்கும் சிறுமி ரெஜினா கண் முன்பே அவரை ரவுடிகள் வெட்டிக் கொலை செய்கிறார்கள். அதனால் அனாதையாகிப் போன ரெஜினாவுக்கு மகிழ்ச்சி என்பதே எட்டாகனியாகி விடுகிறது .சில பல ஆண்டுகள் கழித்து தன் காதல் கணவர் ஜோவால் (ஆனந்த் நாக்), ரெஜினாவின் வாழ்க்கை அழகாகிறது. இந்நிலையில், ஜோ பணியாற்றும் பேங்க்கில் நடக்கும் கொள்ளை சம்பவத்தின் போது, கொள்ளையர்களால் அவர் கொல்லப்படுகிறார். மீண்டும் ரெஜினாவின் வாழ்வில் சூன்யம் நிலவுகிறது..தன் ஆசை கணவனின் இறப்பிற்கு நீதி கேட்டுக் போலீஸ் ஸ்டேசனுக்கு நடையாய் நடக்கும் ரெஜினாவிற்கு, அவமானமும் ஏமாற்றமுமே மிஞ்சுகின்றன. ஒருகட்டத்தில் ஆவேசமாகும் ரெஜினா, தன் கணவனைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்துப் பழிவாங்கத் தனி ஆளாக ஆக்‌ஷன் அவதாரத்தில் களமிறங்குகிறார் என்பதே இப்படத்தின் கதை.

டைட்டில் ரோலில் வரும் ரெஜினா வழக்கம் போல் லவ் சீன்களில் மட்டும் இன்வால்வ் ஆகி ஸ்கோர் செய்கிறார்..அடி, தடி, ஆக்‌ஷன் காட்சிகளில் கொஞ்சமும் ஒட்டவில்லை.. அதிலும் அப்பாவி தோற்றத்தில் இருக்கும் பெண் போலீஸ் துறையை, ரவுடிகளை அசால்டாக எதிர்கொள்வதெல்லாம் நம்பும்படியாகவே இல்லை. மற்றபடி மெயின் கேரக்டரில் வரும் நிவாஸ் ஆதித்தனும், ரித்து மந்த்ராவும் கவனிக்க வைக்கிறார்கள். இவர்கள் தவிர, ஆனந்த் நாக், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை, கஜராஜ், தினா, அப்பானி ஷரத் என ஒரு டஜன் கதாபாத்திரங்கள் எவ்வித அழுத்தத்தையும் தராமல் வந்து போகின்றனர். இவர்களில் பவா துரைக்கு ஏதாவது காரணம் சொல்லி நடிக்க ரெட் போட்டால் நலம் என்று நினைக்க வைத்து விடுகிறார்.

கேமராமேன் ஏனோ ஒரே மூடில் முழு படத்தை எடுத்து கெடுத்து விட்டார்.. சதீஷின் இசையில் பாடல்களில் சித் ஶ்ரீராம் குரலில் ஒலிக்கும் ‘சூறாவளி போல’ என்னும் முதல் பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது.

மோலிவுட் டைரக்டர் டொமின் டி செல்வாவின் முதல் தமிழ் திரைப்படத்தை மலையாள பட பாணியிலேயே வழங்கி இருக்கிறார்,. பெண்ணை மையப்படுத்திய கதையின் போக்கில் அது சரியாக எக்ஸ்போஸ் ஆகவில்லை.. கூடவே நம்பகத்தன்மை இல்லாத பல சீன்களால் ரெஜினா பெயில் ஆகி விட்டார்

மார்க் 2.25/5

error: Content is protected !!