உரிமைத்தொகை சென்று சேரும் வசதியானவர்கள் சதவீதம் என்ன?

உரிமைத்தொகை சென்று சேரும் வசதியானவர்கள் சதவீதம் என்ன?

நேற்று வரை எல்லோருக்கும் தரலை? என்று கேட்ட வாய்கள் இன்று வசதியானவர்களுக்கும் சென்று சேர்கிறதே என்று பேசத் தொடங்கி விட்டனர்.

எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது சில வசதியானவர்களுக்கும் சென்று சேர்வதை தடுக்க முடியாது. ரேஷன் அரிசி முதல் கலர் டிவி வரை இது பொருந்தும். அப்படியே அனுபவித்தாலும் உங்களுக்கு என்ன? இந்த குடும்பங்கள் எல்லாம் கடந்த தலைமுறை வரை ஆதிக்க சக்திகளிடம் அடிமைப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வறுமையில் தவித்தவர்கள் தான். காலம்காலமாக வசதியை அனுபவித்தவர்கள் ஓரிரு சதவீதம் கூட இருக்க மாட்டார்கள்.!

என் சிறு வயதில் சோற்றுக்கஞ்சியில் பசியாறி வளர்ந்திருக்கிறேன். இன்று ஓரளவு நல்ல நிலையில் இருக்க காரணம் முதல் பட்டதாரி முதல் பல்வேறு சலுகைகள் மூலம் கிடைத்த கல்விதான். திராவிட இயக்கம் தான் இதற்கு முழு காரணம்.

உரிமைத்தொகை சென்று சேரும் வசதியானவர்கள் சதவீதம் என்ன 5 முதல் 10 வரை இருக்குமா? இது மகளிர்க்கான உரிமைத்தொகை. எத்தனையோ வசதியான வீடுகளில் கூட மகளிர் தங்கள் செலவுக்கு அடுத்தவரை நாடி இருக்க வேண்டியுள்ளதை பார்க்கிறோம். அவர்கள் தன்மானத்துடனும் சுயகவுரவத்துடனும் யார் கைகளையும் நாடி நிற்காமல் சுதந்திரமாக இயங்கட்டுமே? வாய்ப்பே இல்லை என்று சொன்ன வாய்கள்தான் இன்று அவர்களுக்கு போகிறது, இவர்களுக்கு போகிறது என்று அடித்துக்கொள்கிறது.

இது மகளிர் உரிமைத்தொகை. அவர்களுக்கான சுதந்திரத்தை வழங்கும் திட்டம். பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதன் இன்னொரு வடிவம் தான் இந்த உரிமைத்தொகை மீது வரும் இதுபோன்ற விமர்சனங்கள்…!

ராஜீவ்காந்தி

error: Content is protected !!