இந்திய ரயில்வேயில் அசிஸ்டென்ட் லோகோ பைலட் பிரிவில் ஜாப் இருக்குது!

இந்திய ரயில்வேயில் அசிஸ்டென்ட் லோகோ பைலட் பிரிவில் ஜாப் இருக்குது!

நமது நாட்டின் தரைவழிப் போக்குவரத்தில் அதிக துாரங்களைக் கடப்பதிலும், தொழில்நுட்ப ரீதியாகவும், சரக்குகளைக் கையாள்வதிலும் இந்திய ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. இது பல்வேறு மண்டலங்களாகவும், கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. மேலும் அதிகபட்ச ஊழியர்களைக் கொண்ட தனி நிறுவனம் என்ற சிறப்பையும் பெறுகிறது. பெருமைக்குரிய இந்திய ரயில்வேயில் அசிஸ்டென்ட் லோகோ பைலட் பிரிவில், 26,502 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது : விண்ணப்பதாரர்கள் 2018 ஜூலை 1 அடிப்படையில், 18 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புடன் ஐ.டி.ஐ., முடித்தவர்கள், பிளஸ் 2 உடன், இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்கள். பி.இ., அல்லது பி.டெக்., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை : கம்ப்யூட்டர் முறையிலான ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும். முதலில் கம்ப்யூட்டர் வாயிலான எழுத்துத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்.ஆர்.பி., பகுதியை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதன் பின்னர் நேர்காணல் இருக்கும். விண்ணப்பிக்கும் ஆர்.ஆர்.பி.,யில் உள்ள காலியிடங்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2018 மார்ச் 5.

விபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!