பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடன் வழங்கத் தடை! ரிசர்வ் வங்கி அதிரடி!

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடன் வழங்கத் தடை! ரிசர்வ் வங்கி அதிரடி!

ஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் பல்வேறு திட்டங்களின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கி வருகிறது. அந்த நிறுவனத்தின் ‘இ-காம்’,இன்ஸ்டா இஎம்ஐ கார்டு ஆகிய இரு திட்டங்களின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கடன் வழிகாட்டுதல்களின் தற்போதைய விதிகளை நிறுவனம் கடைப்பிடிக்காதது, குறிப்பாக இந்த இரண்டு கடன் திட்டங்களின் கீழ், கடன் வாங்குபவர்களுக்கு உண்மையான விவரங்களை தெரிவிக்காததால் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த குறைபாடுகள் சரிசெய்யப்படும் வரை தடை தொடரும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இந்தியாவின் முன்னணி கடன் நிறுவனமாக திகழும் பஜாஜ் கடன் நிறுவனம் நாடு முழுவதும் பல கிளைகளை கொண்டு செயல்படுகிறது. இணையதள வளர்ச்சிக்கு பிறகு வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும், உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதற்காகவும் ஏராளமான திட்டங்களை அவர்கள் செயல்படுத்தி வருகின்றனர். வங்கி சாரா நிதி நிறுவனமான ‘பஜாஜ் பின்சர்வ்’ பைனான்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கடன் வழங்கி வருகிறது. இஎம்ஐ வசதியில் பொருட்கள் வாங்க பலரும் பஜாஜ் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ‘இ-காம்’, ‘இன்ஸ்டா இஎம்ஐ கார்டு’ ஆகிய இரண்டு திட்டங்களின் கீழ் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடன் வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு மீறாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் மேற்படி 2 திட்டங்களின் கீழ் கடன் வழங்கும்போது, போதியளவு வெளிப்படைத் தன்மை இல்லாமல் வழங்குவதாக ரிசர்வ் வங்கி கருதியதால், அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். கடன் வழங்கும் நிறுவனங்கள் முழுமையான தகவல்களை அளிக்காமல் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவது தவறாகும். மேலும், ரிசர்வ் வங்கியின் விதிப்படி கடன்களை வழங்குவதில் வெளிப்படைத் தன்மை கொண்டு வரும் வரை இந்த திட்டங்களை மீண்டும் செயல்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது

எனவே, குறைபாடுகள் சரிசெய்யப்படும் வரை இந்த தடை தொடரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

error: Content is protected !!