ரஜினிகாந்த் வக்கீல் நோட்டீஸ் பின்னணி!

ரஜினிகாந்த் வக்கீல் நோட்டீஸ் பின்னணி!

”சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.. சின்ன குழந்தையும் சொல்லும்” 69 வயதில் ஒரு மனிதன் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதிலும் அவர் தான் சூப்பர் ஸ்டார்.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் என கோஷங்களை எழுப்ப வைக்கிறார் என்றால் அதற்கு அந்த மனிதர் எவ்வளவு  மெனக்கெட்டிருக்க வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள்.

சொல்லிக்கும்படி அவ்வளவு அழகு இல்லை.. நிறமோ கறுப்பு தான். பெரிய சினிமா குடும்பத்தில் இருந்து வந்த பிம்பமும் இல்லை. ஆனாலும் தனக்கென தனி பாதையை வகுத்துக் கொண்டு அதில் நேர்மையாக செயல்பட்டு இன்று கடைக்கோடியில் இருக்கும் தமிழர்களுக்கும் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் என்று தெரியும்படியான உயரத்திற்கு சென்று இருக்கிறார் என்றால் கண்டிப்பாக அதில் கடின உழைப்புக்கே அதிகம் பங்கு உண்டு. தனக்கென்று தனி ஸ்டைல், பேச்சிலும் தனக்கென தனி பாணி, தப்போ, சரியோ துணிந்து கேட்கும் ஒருவித துணிச்சல், ஆன்மீகத்தில் அளவுக்கு அதிமான நாட்டம் என ரஜினியின் ரசிகர்கள் அவரை ரசிப்பதற்கு இப்படி பல நூறு காரணங்களை சொல்லுகின்றனர்.

ஒரு வார்த்தையில் சொல்வதானால் 5 தசாப்தங்கள்! 45 வருடங்கள்! இந்திய சினிமாவின் ஒரு அடையாளம் – -இதுதான் ரஜினி

ஆனால் நம் திரையுலகில் இன்று வரை சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் ஆரம்பகாலத்தில் பலரும் இவரது வளர்ச்சிக்கு தடையாகவே இருந்துருக்காய்ங்க. ஒரு பக்கம் பலரும் இவரது வளர்ச்சி தடுத்துக் கொண்டிருந்தனர் மற்றொரு பக்கம் ரஜினிகாந்த் அவரது தீய பழக்கத்தால் ஒரு சில காலங்கள் வளர்ச்சியை அவரே தடுத்து கொண்டார். ரஜினிகாந்திற்கு சில தீய பழக்கங்கள் உள்ளது குறித்து அவரே அண்மையில் ஒரு மேடையில் சொன்னது அனைவருக்கும் தெரியும்.

இதனிடையே ஷூட்டிங் ஸ்பாட்டில் கடினமாக உழைப்பதால் இவருக்கு அடிக்கடி அழுத்தம் ஏற்பட்டு ஒரு சூட்டிங் ஸ்பாட்டில் மயக்கமடைந்து விழுந்துள்ளார். பின்பு உடல் வலிமை இழந்து போனதால் அன்றைய காலத்தில் பலரும் ரஜினிகாந்தை பார்த்து மனநோய் என்று ஒரு புரளியைக் கிளப்பி விட்டாய்ங்க..அப்போ நடிகை ஸ்ரீபிரியா அவருக்கு ஆறுதலாக இருந்துள்ளார். அப்போ பலரும் ரஜினி மெண்டல் அப்படீன்னு சொல்வதைக் கேட்டு கே பாலச்சந்தர் மூலமாக .மனநோய்கான ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டுள்ளார்.

அப்போது மெண்டல் ட்ரீட்மெண்டுக்கு சாப்பிட்ட மாத்திரைகள் வீரியம் இழந்து விட்டதால் இப்படி ஒரு எச்சரிக்கை கடிதாசு கொடுத்திருக்கிறாரோ? என்று சிலர் முணுமுணுத்த சூழலில்  போயஸ் கார்டன் பக்கம் போய் விசாரிச்சோம்..!

ஆனா அவிய்ங்க அவித்து விடும் பூதம் மிரள வைக்குது

அதாவது லாஸ்ட் கொஞ்ச நாட்களா ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எந்த சமூக வலைதளத்தைத் திறந்தாலும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் மற்றும் ஓவியங்கள்தான் நிரம்பி வழியரதைப் பார்க்கலாம். புகைப்படங்களை வைத்து AI உருவாக்கித் தரும் ஓவியங்களைப் பலரும் தங்களது முகப்புப் படமாக மாற்றியிருந்ததைக் கூடப் பார்க்க முடிஞ்சுது. இந்தத் தொழில்நுட்பத்தின் விளைவால் நிகழப் போகும் பேராபத்தை புரிஞ்சே அண்ணாத்தே இப்படி ஒரு வார்னிங் நோட்டீஸ் கொடுத்து இருக்காருன்னு சொன்னாய்ங்க..

அதாவது சில ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 70 களில் சினிமாவை ஆட்சி செய்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன். அந்த காலகட்டத்தில் எம்ஜிஆரின் பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்துச்சு. பெரும்பாலும் அடித்தட்டு மக்களுக்காக போராடும் படங்களில் எம்ஜிஆர் தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் அவரின் நடிப்பில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைஞ்சுது. அப்படத்தை எம்ஜிஆரை இயக்கி, தயாரிச்சு இருந்தார். அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க எம்ஜிஆர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அப்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வந்தார். அதன் பின்பு முதலமைச்சர் ஆனதால் இப்படத்தை எம்ஜிஆரால் எடுக்க முடியாமல் போனது.

அவரின் இந்த ஆசை நிறைவேறாமல் போனதால் மீண்டும் இப்படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதாவது எம்ஜிஆரின் உருவத்தில் முழுக்க முழுக்க 3டி அனிமேஷன் படமாக எடுக்க திட்டமிட்டிருந்தனர். மேலும் இப்படத்திற்கு கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என பெயரும் வைக்கப் பட்டிருந்துச்சு. அதாவது உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்ஜிஆரின் பெயர் விஞ்ஞானி ராஜுவாக இருந்தது. அதனால் இப்படத்திற்கு இவ்வாறு பெயர் வைக்கப்பட்டது. மேலும் இப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் ஐசரி கணேஷ் தயாரிக்க இருந்தார். மேலும் இப்படத்தில் ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், தேங்காய் சீனிவாசன் பலரை அனிமேஷனில் நடிக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்து. ஆனால் தற்போது எம்ஜிஆரின் போட்டோவை அனிமேஷன் செய்யும் போது பெரிய அளவில் சொதப்பி விட்டதெல்லாம் நம் ஆந்தை ரிப்போர்ட்டரில் வெளியானது நினைவிருக்கும்.

ஆனால், இப்போது அப்டேடாகி வந்து புழக்கத்தில் இருக்கும் Generative AI படங்கள் மற்றும் ஓவியங்களை உருவாக்குவதில் கொஞ்சம் கூட பிரச்னை இல்லை. ஆளே இல்லாம் ஒரு அவுட் ஆஃப் போகஸ் போட்டோவை வைத்துக் கொண்டு இரண்டு மணி நேர முழு சினிமா உருவாக்கி விட முடியுமாம்..இதற்கு அச்சு அசலாக வாய்ஸைக் கூட லேட்டஸ்டாகக் கொடுக்க இயல்கிறது என்பதை ஃபுரூப் செய்திருக்கிறார்கள்.. இதன் வீரியத்தைக் கொஞ்சம் சீரியஸாக சொல்ல வேண்டுமென்றால் இப்போது ரஜினி தொடங்கி விஜய் அல்லது அஜித்-தின் பெட்ரூம் சீன்களை கிரியேட் செய்து அது உண்மை என நம்ப் வைக்க சாத்தியம் வந்து விட்டது என்பதுதான் உண்மை..இந்த சமாச்சாரத்தை உறுதிப்படுத்திக் கொண்ட நிலையில்தான் ரஜினி இப்படியோர் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் என்று சொல்கிறார்கள்..!

ஆனாலும் இன்னும் சில டீம்களை இறக்கி இருக்கிறோம்.. இன்னும் முழுமையான தகவல்கள் விரைவில் நம்ம https://www.aanthaireporter.com/   ல்

error: Content is protected !!