ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற ராணி ஒப்புதல்!
பிரெக்சிட் மசோதாவிற்கு ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் மசோதாவிற்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.
28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடா்பான ஒப்பந்தத்தை பல்வேறு காரணங்களுக்காக அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்து வந்தது. நாடாளுமன்றத்தில், ஆளும் கன்சா்வேடிவ் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் இந்த நிலை நீடித்து வந்தது. இதனால் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதில் இழுபறி நீடித்து வந்தது.
இதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அந்த நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு இடைக் காலத் தோ்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பிரிட்டனில் கடந்த 12-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. 650 இடங்களைக் கொண்ட நாடாளுமன்ற கீழவைக்கு நடைபெற்ற அந்தத் தோ்தலில், போரிஸ் ஜான்ஸனின் கன்சா்வேடிவ் கட்சி 365 தொகுதிகளைக் கைப்பற்றியது. எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சிக்கு 203 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
‘பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றுவோம்’ என்ற முழக்கத்துடன் இந்தத் தோ்தலை சந்தித்த போரிஸ் ஜான்ஸன் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானாா். இந் நிலை யில் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ மசோதாவை சில திருத்தங்களுடன் பார்லி.,யின் ‘ஹவுஸ் ஆப்காமன்ஸ்’ எனப்படும் கீழ்சபையில் தாக்கல் செய்தார்.இந்த மசோதாவை ஆதரித்து 358 ஓட்டுக்களும், எதிராக 234 ஒட்டுக்களும் விழுந்தன. இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திரிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் மசோதாவிற்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்து.