பஞ்சாப் நேஷனல் வங்கியில் பயிற்சி பணி வாய்ப்பு!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பயிற்சி பணி வாய்ப்பு!

த்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.மொத்தம் 2,700 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. நாடு முழுக்க உள்ள பஞ்சாப் கிளைகளில் மாநில வாரியாக நிரப்பப்பட உள்ள பயிற்சி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

பணி விபரம்:

‘அப்ரென்டிஸ்’ பிரிவில் உ.பி., 561, பஞ்சாப் 251, மேற்கு வங்கம் 236, ஹரியானா 226, ராஜஸ்தான் 206, டில்லி 178, மஹாராஷ்டிரா 145, ம.பி., 133, குஜராத் 117, ஹிமாச்சல் 83, பீஹார் 79, ஒடிசா 71, தமிழகம் 60 உட்பட 2700 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது:

30.6.2024 அடிப்படையில் 20 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

பணிக்காலம்:

ஓராண்டு

ஸ்டைபண்டு:

மாதம் ரூ. 10 ஆயிரம் – ரூ. 15 ஆயிரம்.

தேர்ச்சி முறை:

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 944. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 708

கடைசிநாள்:

14.7.2024

விவரங்களுக்கு:

pnbindia.in

error: Content is protected !!