புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா தன் கணவர் மீது டிஜிபியிடம் புகார்!

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா தன் கணவர் மீது டிஜிபியிடம் புகார்!

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்கா டிஜிபி ஸ்ரீநிவாசனை நேரில் சந்தித்து, தனது கணவர் சண்முகம் மீது புகார் அளித்துள்ளார். அப்போது தனது கணவர் சண்முகம், தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தொடர்ந்து அவதூறாக பேசுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாய் மொழியாக புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக விசாரிக்குமாறு டிஜிபி, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியின் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த சந்திர பிரியங்கா ஜாதி, பாலின ரீதியில் தாக்குதலுக்கு உள்ளானதாகக் குறிப்பிட்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த குற்றச்சாட்டு கடும் விவாதத்தை கிளப்பிய நிலையில் இவரது ராஜினாமா ஜனாதிபதியால் ஏற்கப்பட்டது. அதே சமயம் சந்திர பிரியங்கா பிரபல தொழிலதிபர் ஒருவருடன் தொடர்பில் உள்ளதால் அவரது கணவரை பிரிந்து வாழ்ந்ததாக கூறப்பட்டது. அதனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபோது அவரது கணவர் மகிழ்ச்சி அடைந்து ஸ்டீரீட் டான்ஸ் ஆடிய வீடியோவை இஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பரவியது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சந்திர பிரியங்கா கணவர் தன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி டிஜிபியை நேற்று சந்தித்து அவர் கொடுத்துள்ள புகாரில் ’கொலை செய்து விடுவதாக மிரட்டிவரும் தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன் மீது அவர் அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும்’ என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதை அடுத்து இது தொடர்பாக விசாரிக்குமாறு டிஜிபி, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!