32°C
விளம்பரம்
Advertisement

புது யுகம் டிவியில் “என்றென்றும் கே.பி “!

admin சேலம் Published: July 6, 2023 3 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி என எல்லாத் தளங்களிலும் தனி முத்திரை பதித்து சிகரம் தொட்டவர் இயக்குநர் சிகரம் கே.பி.என்றழைக்கப்பட்ட கே.பாலச்சந்தர்; ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் ஆளுமை பிம்பங்களை கட்டமைத்த நம்ம  கே.பாலச்சந்தருக்கு 92-வது பிறந்த தினம் வர இருக்கிறது.

’டைரக்‌ஷன் டச்’ என்றொரு வார்த்தை எப்போதில் இருந்து திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருக்கத் தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் இவரின் வருகைக்குப் பிறகுதான், இவரின் படங்களைப் பார்த்துவிட்டுத்தான், இவரின் படக்காட்சிகளையும் வசனங்களையும் கொண்டுதான் ‘டைரக்‌ஷன் டச்’ என்ற வார்த்தை அறிமுகமாகியிருக்கிறது. அந்த ‘டைரக்‌ஷன் டச்’சில் சிகரம் தொட்ட இயக்குநர்… கே.பாலசந்தர்..நடிகர்களின் பக்கம் இருந்த ரசிகப் பார்வையை இயக்குநர்களின் பக்கம் திருப்பியதில் இயக்குநர் ஸ்ரீதருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. அதில் கொஞ்சம் கூட செய்கூலியோ சேதாரமோ இல்லாமல், இன்னும் எல்லை விஸ்தரித்து ‘இது கே.பி. படம்’ எனும் முத்திரையைக் குத்தி பாலசந்தர் படைத்திட்டவை ஏராளம். ‘இது ஸ்ரீதர் படம்’ என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள். அதேபோல், அந்தப் பாதையில் தனித்துவத்துடன் இன்னும் கூடுதல் அழகையும் கூர்மையான புத்திசாலித்தனத்தையும் வசனங்களிலும் காட்சிகளிலும் வைத்து நகாசு பண்ணி இது கே.பாலசந்தர் என்று கண்டுணரச் செய்தரவர். அதனாலேயே இன்றைக்கும் இந்திய சினிமாவின் பிதாமகர் என கொண்டாடப்படும் “பத்ம ஸ்ரீ” “தாதாசாஹேப் பால்கே” ஸ்ரீ கே.பாலச்சந்தர் பிறந்த நாளை ஜூலை மாதம் முழுவதும் கொண்டாட உருவானதே “என்றென்றும் கே.பி “ நிகழ்ச்சி.

சிக்கலான தனிப்பட்ட உறவுகள், தைரியமான சமூக கரு மற்றும் இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தியதில் பெரும் பங்காற்றிய கே. பி புதுமையான பல திரைப்படங்களை இயக்கி சாதனை படைத்தவர். பாலசந்தர் படமென்றால் இப்படித்தான் இருக்கும் என்று எல்லைக் கோடுகளெல்லாம் கிழிக்கமுடியாது. ’நீர்க்குமிழி’ மாதிரி சோகம் பிழியக் கொடுப்பார். ‘நாணல்’ மாதிரி திடுக்கிட வைப்பார். ‘பாமா விஜயம்’ மாதிரி சிரிக்கச் செய்வார். ’அனுபவி ராஜா அனுபவி’யில் இரண்டு நாகேஷைக் கொண்டு இன்னும் வெடிச்சிரிப்பு மூட்டினார்.
பாலசந்தர் இயக்கத்தில், ஓடிய படங்கள் ஓடாத படங்கள் என்றிருக்கலாம். நல்லபடம், சரியில்லாத படம் என்றிருக்காது. எந்தப் படமாக இருந்தாலும், அதில் ‘பாலசந்தர் படம்’ என்று சொல்லுவதற்கான விஷயங்களை ஆங்காங்கே தூவியிருப்பார். அதை இன்றைக்கும் சொல்லிச் சொல்லிச் சிலிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

குறிப்பாக பெண்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் பற்றி வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் அழுத்தமாக காட்சிப்படுத்தியவர்களில் பாலசந்தருக்கு பெரும் பங்குண்டு.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், சரிதா, சுஜாதா, மோகன், பிரகாஷ் ராஜ் என இவரால் ஜொலித்த நட்சத்திரங்களின் பட்டியல் நீளமானது.

அவருடைய பிறந்த நாளை கொண்டாடும் விதமாக புது யுகம் டிவியில் இயக்குனர் வசந்த், இயக்குனர் சரண்,திருமதி புஷ்பா கந்தசாமி,திருமதி கீதா கைலாசம், எழுத்தாளர் இந்திரன் சௌந்தர்ராஜன், டெல்லி கணேஷ், இசைக்கவி ரமணன், கவிதாலயா கிருஷ்ணன், நடிகை சுலக்ஷனா, எம்.எஸ் பாஸ்கர்,மற்றும் சிலர் வாரம் தோறும் என்றென்றும் கே.பி சிறப்பு நேரலையில் பங்கேற்கின்றனர்.

இந்திய சினிமாவின் பிதாமகரை கொண்டாடும் இந்நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 5, 2023 வரை ஒவ்வொரு சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகிறது.

இதில் நேயர்களும், ரசிகர்களும் கலந்து கொள்ளலாம்

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்