புதுசா தியேட்டர் ஓப்பன் பண்ணி இருக்கும் ஞானவேல்ராஜா!

தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா அவர்களின் Studio Green Films நிறுவனம் பல்லாண்டுகளாக மதிப்புமிகு படைப்புகளை, தரமான படங்களை தயாரித்து, வழங்கி, மற்றும் விநியோகித்தும் வருகிறது. தென்னிந்திய திரையுலகில் மதிப்புமிக்க தயாரிப்பாளர்களுள் ஒருவராக வலம்வரும் K.E. ஞானவேல் ராஜா 2021 ஆண்டிலும் பல ஆச்சர்யகராமான படைப்புகளை தயாரித்து வரிசையாக வெளியிட காத்திருக்கிறார். தயாரிப்பு உலகில் பெரும் வெற்றியை கண்டிருக்கும் அவர் தற்போது புதியதொரு பயணத்தை தொடங்கியிருக்கிறார். Green Cinemas எனும் பெயரில் தொடர் தியேட்டர் குழுமமாக விரைவில் பரிமளிக்க போகும் வகையில் பாடி ராதா (சென்னை) யில் முதல் திரையரங்கை துவங்கி உள்ளார்.
Green Cinemas சார்பில் K.E. ஞானவேல் ராஜா கூறியது…
சாய் நல்லாசியோடு GREEN CINEMAS குழுமம் சார்பில் எங்களின் முதல் திரையரங்கை பாடியில் (அண்ணா நகர் அருகில்) GREEN CINEMAS – PADI RADHA எனும் பெயரில் துவங்கியுள்ளோம். இரண்டு திரைகள் கொண்ட இந்த திரையரங்கில் ஒன்று 384 இருக்கைகளுடனும் மற்றது 142 இருக்கைகள் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரையரங்கு தற்காலத்திய அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 4K Projection ATMOS Sound மற்றும் 3D Projection கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் மிகச்சிறப்பான திரை அனுபவத்தை பெரும் வகையில் மிக விலாசமான ஹால், மிகப்பெரிய இடம் கொண்ட கழிவறை வசதி, சுகாதாரம் பேணும் வகையிலான திண்டபண்டங்கள், குளிர் பானங்கள் கொண்ட உணவகம் இந்தத் திரையரங்கில் அமைந்துள்ளது.
GREEN CINEMAS உடைய முக்கிய குறிக்கோள் ரசிகர்கள் இந்த பொதுமுடக்க காலத்தில் மிகப் பாதுகாப்பான உணர்வுடன் ஒரு கொண்டாட்டமான அனுபவத்தை பெற செய்வதென்பதே ஆகும். எங்களது இந்த புதிய பயணத்திற்கு உங்களின் ஆதரவையும் அன்பையும் வேண்டுகிறேன் நன்றி.
திரையரங்கு திறந்துள்ள ஞானவேல்ராஜாவிற்கு நடிகர் கார்த்தி, ஆர்யா என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆர்யா கூறியிருப்பதாவது: இது உங்களது ஆரம்பம். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். இது போன்று இன்னும் நிறைய திரையரங்குகள் நீங்கள் திறக்க வேண்டும். இந்த பொங்கலுக்கு மாஸ்டர் படமும், ஈஸ்வரன் படமும் பாடியில் உள்ள கிரீன் சினிமாஸ்ல ரிலீசாகி இருக்கிறது.
படத்தை திரையரங்குகளில் பார்ப்பதை விட சிறந்த அனுபவமும் எங்கும் கிடைக்காது. இந்த கொரோனா காலத்திலேயும், ரசிகர்களாகிய உங்களுக்காக திரையரங்கு அனுபவம் இருக்க வேண்டும் என்பதறகாக துணிச்சலோடு மாஸ்டர், ஈஸ்வரன் ஆகிய படங்களை திரையரங்குகளில் வெளியிட்டுள்ளார்கள்.
அவர்களுக்கு எனது பாராட்டுகள். தயவு செய்து இந்த இரு படங்களையும் திரையரங்குகளில் பார்த்து உங்களது ஆதரவை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.