பிளஸ்-2 முடித்தவர்களுக்கு டெல்லியில் போலீஸ் வேலை!

பிளஸ்-2 முடித்தவர்களுக்கு டெல்லியில் போலீஸ் வேலை!

டெல்லி காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 7,547 காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2491 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

+2 முடித்திருக்க வேண்டும்.

வயது:

1.7.2023 அடிப்படையில் 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

விண்ணப்பம்:

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். உடல் தேர்வு நடத்தப்படும். சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார் உள்ளிட்ட இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவினருக்கு ரூ.100, பெண்கள் மற்றும் எஸ்.சி. / எஸ்.டி பிரிவினருக்கு இலவசம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

செப்டம்பர் 30 வரை

இணையதளம்:

ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!