June 9, 2023

பிரபல பிளேபாய் இதழின் நிறுவனர் ஹக் ஹெஃப்னர் காலமானார்!

பிரபல பிளேபாய் இதழின் நிறுவனர் ஹக் ஹெஃப்னர்(91) புதன்கிழமை இரவு காலமானார். ”பிளேபாய்” இந்த வார்த்தையை உபயோகிக்காத இளசுகளோ, பெரிசுகளோ கிடையாது. முழு நிர்வாணப் படங்களுககுப் புகழ் பெற்ற பிளேபாய் பத்திரிக்கையை ஆரம்மித்தவர் ஹக் ஹெஃப்னர். இவருடைய அம்மா ஒரு ஆசிரியை. டீச்சர் பிள்ளை மக்கு என்ற பொன்மொழிக்கு மிகப் பொருத்தமாக இருந்தார் ஹயூச். ஹயூச் பள்ளிக் கூடத்தில் சரியான மக்கு என்று பெயரெடுத்தான். ஆசிரியையான தன்னுடைய குழந்தை மக்காக இருக்கிறானே என வருந்தினார் அவன் அம்மா. பிறகு ஒரு உளவியல் நிபுணரிடம் கொண்டு போய் சோதித்தார்.

ஹஃபின் அறிவில் ஆச்சரியமடைந்தார் மனோதத்துவ நிபுனர். “இவன் மிகச் சிறந்த அறிவாளி. தன்னுடைய சொந்த முயற்சியாலேயே முன்னேறி விடுவான்” என்றார். ஹஃபின் அம்மாவோ பையன் மக்காவே இருக்கிறான் என்றார். “இவனுக்கு படிப்பில் ஆர்வமில்ல. அவ்வளவுதான் மத்த படி, இவன் மந்தமான பையன் அல்ல” என்று பாராட்டினார்.

பெரியவன் ஆனதும் ஹெஃப்னர் செய்த முதல் வேலை என்ன தெரியுமா. தன் வீட்டில் இருந்த பர்னீச்சர்களை அடமானம் வைத்து அறுநூறு டாலரை புரட்டினான். அந்த பணத்தில் ஐந்நூறு டாலரை ஒரு ஸ்டூடியோவில் கொடுத்து கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோவின் நிர்வாணப் படங்களை வாங்கினான். அது காலண்டர்களுக்கா நிர்வாணமாய் நடிகை மன்றோ கொடுத்த புகைப் படங்கள். மீதம் இருந்த நூறு டாலரை வைத்து பிளேபாய் முதல் இதழை வெற்றிகரமாக வெளியே கொண்டு வந்தார். 1953ம் ஆண்டு டிசம்பர் மாதம் மார்க்கெட்டுக்கு வந்தது முதல் பிளேபாய் பத்திரிக்கை. காமத்தில் திளைத்திடும் மக்கள் சில நாட்களியே புத்தகங்கள் அனைத் தையும் வாங்கிப் போனார்கள். இந்த புத்தகங்கள் விற்குமோ, விற்காதோவென பயந்து கொண்டிருந்த ஹெஃப்னருக்கு ஆனந்தமாக இருந்தது.

அடுத்தடுத்து புதிய அழகிகளின் நிர்வாணப் படங்களோடு பிளேபாய் தொடர்ந்துவர ஆரமித்தது. அமெரிக்காவில் தொடங்கிய பயணம். உலகின் கடைக்கோடிவரை “பிளேபாய்” பத்திரிக்கையை அறிய செய்தது. நகைச்சுவை கலந்த செக்ஸ் பத்திரிக்கையாக வந்தாலும் பல குடும்ப பெண்கள், டாக்டர்கள், நடுத்தர வர்க்க மக்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் என எல்லோரும் வாங்கி பெருமைகொள்ளும் அளவிற்கு போனது குறிப்பிடத்தக்கது.