கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்து தயார்!- பதஞ்சலி அறிவிப்பு

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்து தயார்!- பதஞ்சலி அறிவிப்பு

நாட்டில் பெரும்பாலானோருக்கு அறிமுகமான பதஞ்சலி நிறுவனம் கொரோனாவின் மருந்தைக் கண்டு பிடித்துவிட்டதாகவும், இது வரை தங்கள் மருந்தைக் கொண்டு 80% நோயாளிகளை குணப்படுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் பரவிக் கொண்டே ஒருக்கும் தொற்றுநோயான கொரோனா வைரஸ் காரணமாக, இன்று ஒவ்வொரு ஜனம் மனதிலும் பீதி நிலவுகிறது. பல நாடுகளின் விஞ்ஞானிகள் நோய் தொற்றுக்கான மருந்தைத் தேடி இரவு பகலாக மும்முரமாக உழைத்து வருகின்றனர். அந்த வகையில் நம் நாட்டைச் சேர்ந்த பதஞ்சலி நிறுவனம் சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலாகவே மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பதஞ்சலி இறங்கி விட்டது என்றும்

தற்போது கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பதஞ்சலியால் குணப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், அதன் விசாரணை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை, வெளியான பிறகே உண்மை நிலவரம் தெரியவரும். மேலும் நிறுவனம் கொரோனாவை ஆயுர்வேத மருத்துவத் தால் மட்டுமே தோற்கடிக்க முடியும் என்றும் வலியுறுத்தி வருகிறது. இது குறித்து பதஞ்சலி நிறுவனத்தின் துனை நிறுவனரான ஆச்சார்யா பாலகிருஷ்ணா, ‘”எங்கள் பதஞ்சலி நிறுவனத்தின் ஒவ்வொரு துறையும் இந்த கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்தன. இதர்க்காக ஏகப்பட்ட வேதங்களை கவனமாக படித்து கொரோனாவுக்கான மருந்தை உருவாக்கியிருக்கிறோம். வேதங்களில் கூறப்பட்டிருக்கும் சூத்திரங்களை கடைப்பிடித்து முழுக்க முழுக்க ஆயுர்வேத பொருட்களை கொண்டு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு விதிமுறைப்படி பதஞ்சலி மருந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. பதஞ்சலியின் கொரோனா மருந்து ஏற்கனவே சுமார் 1000 பேரை குணப்படுத்தி இருக்கிறது.

நாடு முழுவதும் பல்வேறு கொரோனா நோயாளிகளுக்கு பதஞ்சலி மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 80% பேர் விரைவில் குணமடைந்துவிட்டனர். நாங்கள் கண்டுபிடித்திருக்கும் மருந்தை உட்கொள்ளும் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளி, 5 முதல் 14 நாட்களுக்குள் குணமடைவதுடன் , கோவிட் பரிசோதனையில் நெகட்டிவ் தொற்று இருப்பதும் உறுதிப்படுத்தப்படுவார்.

ஆயுர்வேதத்தில் 100% இதற்கு குணப்படுத்தும் வழிகள் உள்ளன. இன்னும் 4 அல்லது 5 நாட்களில் தரவுகள் மற்றும் ஆதாரங்களுடன் எங்களின் மருந்தை வெளியிடுவோம்”என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!