32°C
விளம்பரம்
Advertisement

ஊட்டி ஃபிளவர் ஷோ – மே 10 முதல் 10 நாட்கள் நடத்த முடிவு!

admin சேலம் Published: April 28, 2024 4 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



கோடை வாசஸ்தலமான நீலகிரி டிஸ்ட்ரிக்கில் உள்ள மலைகளின் ராணி என்ற பெயரெடுத்த உதகை என்ற ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. அங்கு கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 1896 முதல் ஒவ்வொரு ஆண்டும் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. முதல் மலர் கண்காட்சியை நீலகிரி வேளாண் தோட்டக்கலை சங்கம் நடத்தியது. நீலகிரி வேளாண் தோட்டக்கலை சங்கத்தின் தலைவர் திரு.ஜே.ஹெச்.டிரெமென்ஹேர், அப்போதைய நீலகிரி மாவட்ட கலெக்டரால் இதை திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறை மூலம் நீலகிரி மலர் மற்றும் பழ கண்காட்சி குழு என்ற குழுவை அமைத்து 1980 முதல் மலர் கண்காட்சியை நடத்தி வருகிறது. மலர் கண்காட்சிக்கு உலகம் முழுவதிலுமிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,00,000 சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். பாரம்பரியமாக, ஆண்டுதோறும் மே மாதத்தின் மூன்றாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கோடைக்காலத்தில் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, 2009 முதல் இரண்டு நாட்களில் இருந்து மூன்று நாட்களாக காட்சிப்படுத்தப்படும் நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15000 தொட்டிகளில் பூக்கும் தாவரங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இது தவிர மலர் கண்காட்சியின் போது 1500 பூந்தொட்டிகள் போட்டியாளர்களால் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வண்ணங்களில் சுமார் 150 வகையான மலர்கள் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன. போட்டியாளர்களால் 50க்கும் மேற்பட்ட பானை செடிகள், 150 வகையான வெட்டப்பட்ட பூக்கள், பல்வேறு வகையான வெப்பமண்டல, மிதமான காய்கறிகள் மற்றும் பழங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. மலர் அலங்காரங்கள், இந்திய மற்றும் ஜப்பானிய மலர் ஏற்பாடுகள், காய்கறி செதுக்குதல், மலர் ரங்கோலி, போன்சாய் போன்றவை நிகழ்ச்சி நாட்களில் முக்கிய ஈர்ப்பாகும். நீலகிரி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 250 விவசாயிகள், தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் மலர் கண்காட்சி நாளில் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்கின்றனர். பல அரசு துறைகள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களும் மலர் பிரியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன்களுக்காக தங்கள் செயல்பாடுகளை காட்சிப்படுத்துகின்றன.

தோட்டக்கலையை ஊக்குவிக்க தோட்டத் தோட்டங்கள், தனியார் குடிசைத் தோட்டங்கள், பொதுத் தோட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான தோட்டங்களை உள்ளடக்கிய ஒரு தோட்டப் போட்டியும் நடத்தப்படுகிறது, சராசரியாக, சுமார் 300 தோட்டங்கள் இந்த நிகழ்வில் போட்டியிடுகின்றன. மலர் கண்காட்சிக்கு முன்னதாக தோட்டப் போட்டி நடத்தப்பட்டு, சிறந்த தோட்டங்களுக்கு மலர்க் கண்காட்சியின் இறுதி நாளில் கோப்பைகளும் பரிசுகளும் வழங்கப்படுகின்றன..

ஆனால் மக்களவைத் தேர்தல் காரணமாக தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால், இந்தாண்டு கோடை விழாக்கள் ரத்து செய்யப்பட்டு, மலர் கண்காட்சி மற்றும் பழக்காட்சி மட்டுமே நடக்கும் என அறிவிக்கப்பட்டது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126-வது மலர்காட்சி மே மாதம் 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது மலர் கண்காட்சி மே 10-ம் தேதி முதல் 10 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா கூறியதாவது: கோடைகாலம் தொடங்கியுள்ளதால் நீலகிரி மாவட்டத்துக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். குறிப்பாக இன்று மட்டும் உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுமார் 20,000 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு உதகையில் 126-வது மலர்க்காட்சி வரும் மே 10-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரையும், அதேபோல் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64-வது பழக்காட்சி மே 24 முதல் மே 26 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்காகவும், குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவதற்காகவும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தண்ணீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. இந்த தண்ணீர் ஏடிஎம் இயந்திரங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக இயந்திரத்துக்கு ஒரு அலுவலர் வீதம் நியமிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.

இந்த தண்ணீர் ஏடிஎம் இயந்திரங்கள் மாதந்தோறும் சுகாதாரத்துறையின் மூலம் கிருமிகள் ஏதேனும் உள்ளதாக என பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், 3 மாதங்களுக்கு ஒருமுறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமும் தண்ணீர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, நமது மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, நீலகிரி மாவட்டம் தொடர்ந்து நெகிழி இல்லா மாவட்டமாக நீடிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.“, என்று அவர் கூறினார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்