போதை மயக்கத்துடன் ரயிலை ஓட்டுவோர் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காம்!

போதை மயக்கத்துடன் ரயிலை ஓட்டுவோர் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காம்!

ந்தியன் ரயில்வே தினமும் கோடிக்கணக்கான பயணிகளை தங்களது ஊருக்கு பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு போகிறது. இதில் புதிய தொழில்நுட்பங்களின் பங்களிப்பு இருந்தாலும், ரயில் ஓட்டுனர்களின் பங்களிப்பும் அதிகம் தான். என்ன தான் தான் இயங்கி என்ஜின்களை கண்டுபிடித்தாலும் மனிதர்கள் இயக்குவது தான் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அப்படி ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கும் ரயிலை ஓட்டும் ஓட்டுநர்கள் லோகோ பைலட்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தது 2 டிரைவர்கள் இருப்பர். அதாவது ரயில் ஓட்டுநரை “Loco Pilot” (LP) என்றும் அவருக்கு உதவி செய்பவரை “Assistant Loco Pilot” (ALP) என்றும் கூறுவார்கள். இன்றைய சூழ்நிலையில் அவர்கள் ஒவ்வொரு நாளும் 13 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள்.ஒரு ரயில் வண்டி ஓடாமல் சும்மா நின்று கொண்டிருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 25 லிட்டர் டீசல் செலவாகிறது. 100 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 400 முதல் 500 லிட்டர் டீசல் செலவாகிறது.

அது சரி !இந்த ரயிலை ஓட்டுபவர்கள் தூங்குவார்களா? அப்படி தூங்கினால் எப்படி கண்டு பிடிப்பது? தூங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது; ஆனால் இரண்டு பேருமே தூங்க முடியாது; யாராவது ஒருத்தர் விழித்து இருக்க வேண்டும். VCD எனப்படும் விஜிலன்ஸ் கண்ட்ரோல் டிவைஸ் அவர்களை தூங்க விடாது. ஏனென்றால் ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை அதில் உள்ள பொத்தானை அமுக்க வேண்டும். அப்படி அவர்கள் அதை அமுக்கவில்லை என்றால், எட்டு வினாடிக்கு பிறகு விளக்கு எரியும். அதையும் அவர்கள் உதாசீனப்படுத்தினால், அடுத்த எட்டு வினாடிக்கு சத்தமும் சேர்ந்து கொண்டு விளக்கு எரியும், அதையும் உதாசீனப்படுத்தினால், Automatic breaking system மூலம் வண்டி தானாகவே நின்று விடும்.

ஆனால் அந்த பைலட்டுகள் வண்டியின் வேகத்தை கூட்டுவது, குறைப்பது, ஹாரன் அடிப்பது போன்ற வேலைகளில் இருந்தால், அந்த பொத்தானை அமுக்க வேண்டியது இல்லை. இந்த காலத்தில் தான், பட்டன் போன்ற பொத்தானை அமுக்கிற வேலை, முன்நாளில் எல்லாம் ஒரு பெரிய கம்பியை இழுத்து இழுத்து விட வேண்டும். அதன் பெயர் “Deadman’s Lever”.

இன்று வரையில் ரயில்வே ஓட்டுனர்களுக்குத் தனியாக கழிப்பறைகள் இல்லை. அடுத்த ஸ்டேஷன் வரைக்கும் அவர்கள் அடக்கி வைக்கத்தான் வேண்டும். அதுவும் அடுத்த ஸ்டேசனில்கூட ஒரு நிமிடம்தான் வண்டி நிற்கும். சிக்னல் விழுந்த உடன் வண்டியை எடுக்கணும். 110 kmph குறையாமல் வண்டி ஓட்டணும். பஞ்சுவாலிட்டி இருக்கு. இதிலே இன்ஜின் பிரச்சினை, தண்டவாளத்தில் ஏதேனும் பிரச்சினை, சிக்னல், மனிதர்கள் தற்கொலை மற்றும் விலங்குகள் குறுக்கே வருதல் என அனைத்தையும் கண் விழித்து பார்த்து ஓட்டவேண்டும். கேட் ஹாரன் அடிக்கவேண்டும். 60 செகண்டுக்கு ஒரு முறை VCD பிரஸ் பண்ணனும்; 25 kwh கரண்டின் கீழ் வேலை; இன்ஜீன் சூடு. ராத்திரியில் வண்டியின் வேகத்தை பொருத்து கத்தி போல குத்தும் குளிர். கூடுதல் வேகத்தில் செல்லக் கூடாது. சரியான நேரத்திற்குச் செல்ல வேண்டும். சிவப்பு சிக்னலை தாண்டினால் வேலை போய்விடும் என பல அழுத்தங்கள் இருக்கிறது. டைம் குறைந்தாலும் விளக்கம் எழுதி கொடுக்கணும். இதேதான் பகல் நேரங்களிலும்.

இப்படி பலவிதமான சிக்கல்களுக்கு இடையில்தான் ரயில் ஓட்டுநர்கள் நம்மை பாதுகப்பாக பயணிக்க வைக்கிறார்கள்! இப்பேர்ப்பட்ட ஓட்டுநர்கள் நிரைந்த நம் இந்தியாவில் உள்ள மூன்று ரயில்வே மண்டலங்களில் உள்ள ரயில் ஓட்டுநர்களிடம் நடத்தப்பட்ட மூச்சுப் பரிசோதனையில் சுமார் ஆயிரம் பேர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. மேற்கு ரயில்வே, வடக்கு ரயில்வே மற்றும் மேற்கு மத்திய ரயில்வே மண்டலங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் சுமார் 995 பேர் மது அருந்தி இருந்தது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தரவுகள் மூலம் வெளியாகியுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு முதல், ரயில் ஓட்டுநர்கள் மது போதையில் இருந்திருக்கிறார்களா என்பதை கண்டறிவதற்கான ப்ரீத் அனலைசர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பணி முடிந்து ரயிலில் இருந்து கீழே இறங்கியவுடன் ரயில் ஓட்டுநர்களுக்கு இந்த சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனை முடிவில் 20 மில்லிகிராமுக்கும் கீழாக ரத்தத்தில் ஆல்கஹால் அளவு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. 20 மில்லி கிராமிற்கும் மேலாக ரத்தத்தில் ஆல்கஹால் இருந்தால் அவர்கள் மதுபோதையில் இருந்ததாக கருதப்படும். 100 மில்லி கிராமிற்கும் அதிகமாக இரத்தத்தில் ஆல்கஹால் இருந்தால் அவர்கள் தீவிர மதுபோதையில் இருப்பதாக கருதி, அவர்கள் இடைநீக்கம், பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஆட்படுத்தப்படுவார்கள்.இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ஒருவர் ரயில் ஓட்டுநர்கள் மதுபோதையில் இருந்தது தொடர்பான தகவல்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரயில்வேக்கு விண்ணப்பித்திருந்தார்.

இதையடுத்து ரயில்வே அளித்த தகவலில், கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 995 ரயில் ஓட்டுநர்கள் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கினர் பணியின் போது மதுபோதையில் இருந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3ல் 1 பங்கினர் பயணிகள் ரயிலை இயக்கியுள்ளனர்.அதிகபட்சமாக டெல்லியில் 471 ஓட்டுனர்கள் மது அருந்தி இருந்ததாகவும் அதில் 181 பேர் பயணிகள் ரயில் இயக்குபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. அதில் பணி முடிந்து ரயிலை விட்டு இறங்கிய ஓட்டுநர்கள் 189 பேர் மது அருந்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் 104 ஓட்டுநர்கள் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதில் 41 பேர் பயணிகள் ரயில்களை இயக்குபவர்கள் தகவலும் வெளியாகியுள்ளது. ஆக 995 ஓட்டுநர்களில் மூன்றில் ஒரு பங்கு ஓட்டுனர்கள் பணி நேரத்தில் மது அருந்தியிருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக  சமீபகாலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில் தடம்புரள்வது, சிக்னல் பிரச்னை, ரயில்கள் நேருக்கு நேர் மோதல், தீ விபத்து போன்ற விபத்துகள் தொடர்ந்து நேரிட்டன. குறிப்பாக, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநகர் பஜார் பகுதியில் கடந்த ஜூன் 2-ம் தேதி நடந்த விபத்தில் 280 பேர் உயிரிழந்தனர். 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடையும் சம்பவங்கள் அதிகரிப்பதற்குக் காரணம் இந்த குடிப் பழக்கமா? என்பதை ஆராய வேண்டியது அவசியம்.

error: Content is protected !!