கச்சா எண்ணெய் விலை எகிறியதால் பெட்ரோல், டீசல் விலையும் உயரும்!

கச்சா எண்ணெய் விலை எகிறியதால் பெட்ரோல், டீசல் விலையும் உயரும்!

டந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலையும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 90 நாட்களாக விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலையொட்டி இந்திய ஒன்றிய அரசு விலைகளை உயர்த்தவில்லை என்றும், தேர்தல் முடிந்த உடன் பெட்ரோல், டீசல் விலைகள் நாள்தோறும் மீண்டும் உயர்த்தப்படும் என்றும் மக்களே விமர்சிக்கிறார்கள். இந்நிலையில், கச்சா எண்ணெய் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் திடீர் என உயர்த்தி உள்ளது. இதனால், தேர்தல் முடிந்த கையொடு பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையாக உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.

அதோடு, ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றத்தால் மேலும் சிக்கல் அதிகரித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா ராணுவத்தைக் குவித்து வைத்திருப்பதால், ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவுக்கான ஏற்றுமதி தடைபடும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் திடீரென விலையை உயர்த்தியுள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலை கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் 1.11% உயர்ந்து, 91.03 டாலராக விலை அதிகரித்து வர்த்தகமாகிறது. டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 0.33% உயர்ந்து, 87.15 டாலராக வர்த்தகம் ஆகிறது. டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு மூலப்பொருளாக இருக்கும் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!