நார்வே செஸ் தொடர்:அசத்தும் அக்கா வைஷாலி & தம்பி பிரக்ஞானந்தா!

நார்வே செஸ் தொடர்:அசத்தும் அக்கா வைஷாலி & தம்பி பிரக்ஞானந்தா!

நார்வே செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 சுற்றுகள் நடைபெறும் இந்த செஸ் தொடரில் அதிக புள்ளிகள் பெறுபவர்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றுவர். நார்வே நாட்டைச் சேர்ந்த 5 முறை சாம்பியனான கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்ளிட்ட 6 பேர் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர். முதல் சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி பெற்ற நிலையில், 2வது சுற்றில் தோல்வி அடைந்தார். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா இந்தியாவின் சார்பாக பங்கேற்று விளையாடி வருகிறார்.

3வது சுற்றில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த உலகின் முதல் நிலை வீரரான கார்ல்சனை, பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா ராஜாவிற்கு முன் உள்ள சிப்பாயை நகர்த்தி ஆட்டத்தை தொடங்கினார்.அதேபோல் கார்ல்சன் சற்று வித்தியாசமாக ராணிக்கு அருகில் இள்ள மந்திரிக்கு முன் உள்ள சிப்பாயை நகர்த்தி ஆட்டத்தை தொடங்கினார். இறுதியில் 37 வது நகர்த்தலில் கார்ல்சன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.இதன் மூலம் 10 சுற்றுகள் கொண்ட இந்த நார்வே செஸ் தொடரில் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

இதேபோல் நார்வே செஸ் தொடரில் பெண்களுக்கான பிரிவில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி உள்ளிட்ட 6 பேர் பங்கேற்கின்றனர். இத்தொடரின் இரண்டாவது சுற்றில் வைஷாலி ஹம்பியை கிளாசிக்கல் முறையில் எதிர்கொண்டார். அதில் 45 நகர்த்தலில் ஹம்பியை வீழ்த்தி 4.0 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார்.இவருக்கு பின் 2வது இடத்தில் 4.5 புள்ளிகளுடன் வென்ஜுன் 2வது இடத்தில் இருக்கிறார்.

இப்படி நார்வே செஸ் தொடரில் தமிழ்நாட்டின் செல்ல மகனும், மகளும் முன்னிலையில் இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!