அமைதிக்கான நோபல் பரிசு : எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலிக்கு அறிவிப்பு!

அமைதிக்கான நோபல் பரிசு : எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலிக்கு அறிவிப்பு!

நடப்பு ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, எத்தியோப்பிய நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு ((Abiy Ahmed Ali))அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற விஞ்ஞானியின் பெயரால் ஒவ்வோர் ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவமும் உடலியங்கியலும், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை புரிந்தவர்களைக் கௌரவிக்கும் பொருட்டு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படுகிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் மற்ற எல்லா விருதுகளும் வழங்கப்படும்.

இந்த விருதுகளில் மிகவும் உயரியதாக கருதப்படும் அமைதிக்கான நோபல் விருது எத்தியோப்பிய நாட்டின் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்காகவும், அண்டை நாடான எரித்தியாவுடன்பல ஆண்டுகளாக நிலவிய எல்லை பிரச்னைக்கு தீர்வு காண உறுதியான நடவடிக்கை எடுத்ததற்காகவும் அபய் அகமது அலி அந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

முன்னதாக, நோபல் விருதுக்கு ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெடா தன்பர்க், ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல், கீரிஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ், வடக்கு மேசிடோனியா பிரதமர் ஜோரன் ஜேவ் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதற்கு முற்றிலும் மாறாக, எத்தியோப்பிய பிரதமர் அபய் அகமது அலி அந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1901ம் ஆண்டு முதல் இதுவரை 99 நோபல் அமைதி விருதுகள் தனியார் மற்றும் 24 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அமைதிக்கான நோபல் விருது நார்வே தலைநகர் ஓஸ்லோவிலும், பிற விருதுகள் ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

Related Posts

error: Content is protected !!