NICL நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்கள்:ரூ.63,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NICL), நாடு முழுவதிலும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள 500 உதவியாளர் (Assistant Class-III) பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிகிரி முடித்த பட்டதாரிகளுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாகும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.63,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
மாநில வாரியான காலியிடங்கள்
மொத்தமுள்ள 500 காலியிடங்களில் மாநில வாரியான விவரங்கள்:
-
தமிழ்நாடு: 49
-
புதுச்சேரி: 02
-
கேரளா: 35
-
கர்நாடகா: 30
-
ஆந்திரப் பிரதேசம்: 14
-
தெலுங்கானா: 15
-
மகாராஷ்டிரா: 57
-
மேற்கு வங்கம்: 46
-
ராஜஸ்தான்: 36
-
குஜராத்: 34
-
டெல்லி (UT): 20
-
அசாம் / சத்தீஸ்கர் / மத்தியப் பிரதேசம்: தலா 18
-
ஒடிசா: 16
-
பீகார்: 12
-
ஜார்க்கண்ட் / பஞ்சாப்: தலா 10
-
உத்தரப் பிரதேசம்: 24
-
உத்தராகண்ட்: 08
-
அருணாச்சலப் பிரதேசம்: 05
-
ஜம்மு & காஷ்மீர் / சண்டிகர்: தலா 04
-
ஹரியானா: 03
-
கோவா / மேகாலயா / மிசோரம் / திரிபுரா / இமாச்சலப் பிரதேசம்: தலா 02
-
நாகாலாந்து / சிக்கிம்: தலா 01
தகுதி மற்றும் வயது வரம்பு
கல்வித் தகுதி
-
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு (Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை எழுத, படிக்க, பேச தெரிந்து இருப்பது கட்டாயம். (எ.கா: தமிழ்நாட்டில் உள்ள 49 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்).
வயது வரம்பு (01.07.2026 தேதியின்படி)
-
குறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள் (01.07.2005-க்கு பிறகு பிறந்திருக்கக் கூடாது).
-
அதிகபட்ச வயது: 30 ஆண்டுகள் (02.07.1996-க்கு முன்பாக பிறந்திருக்கக் கூடாது).
-
வயதுத் தளர்வு: எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் (35 வயது வரை), ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் (33 வயது வரை) அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை & விண்ணப்பக் கட்டணம்
-
தேர்வு முறை: ஆன்லைன் வழியிலான இருகட்ட எழுத்துத் தேர்வுகள் (முதல் நிலை மற்றும் முதன்மைத் தேர்வு) மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
-
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 850 (ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்).
-
கட்டண விலக்கு: எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
முக்கிய தேதிகள்
-
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.08.2026
-
முதல் கட்ட ஆன்லைன் தேர்வு (Prelims): 27.08.2026
-
இரண்டாம் கட்ட ஆன்லைன் தேர்வு (Mains): 30.10.2026
-
நேர்முகத்தேர்வு: தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
-
NICL Careers Page தளத்திற்குச் செல்லவும்.
-
“RECRUITMENT OF 500 ASSISTANT (CLASS-III) 2026-27” அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
-
Apply Online லிங்கை கிளிக் செய்து, New Registration மூலம் பதிவு எண் மற்றும் கடவுச்சொல் பெறவும்.
-
விண்ணப்பத்தில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும்.
-
கட்டணத்தைச் செலுத்தி, விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின் அதன் பிரதியைச் சேமித்து வைத்துக்கொள்ளவும்.



