2017 நியூ இயர் ஒரு நொடி தள்ளித்தான் பிறக்கும்! ஏன் தெரியுமா?

2017 நியூ இயர்  ஒரு நொடி தள்ளித்தான் பிறக்கும்! ஏன் தெரியுமா?

நம் காலக் கடிகாரத்தில் கடந்த 1972-ம் ஆண்டில் லீப் விநாடி முதல் முறையாக அறிமுகமானது. அன்றுமுதல் இதுவரை 26 முறை லீப் விநாடி சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் வரும் 31-ம் தேதி லீப் விநாடி சேர்க்கப்படுகிறது. எனவே இன்று வரும் 2017 புத்தாண்டு பிறக்க கூடுதலாக ஒரு விநாடி நேரமாகும் என்று சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு (ஐஇஆர்எஸ்) அறிவித்துள்ளது.லீப் விநாடி குழப்பத்தை தவிர்க்க கூகுள் நிறுவனம் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது. அதன்படி கூகுளின் சர்வர் கடிகாரம் ஒரு விநாடியை ஈடுகட்ட 20 மணி நேரம் சற்று மெதுவாகச் சுற்றும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

new year dec 30

அதாவது புவி சுழற்சியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வருகிற 2017-ஆம் ஆண்டு ஒரு நொடி தாமதமாகப் பிறக்கும் என்று கால அளவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், இதனால் ஏற்படும் காலதாமதத்தை ஈடுகட்டும் வகையில்தான் உலகக் கடிகாரத்தில் செயற்கையாக “லீப்’ நொடி ஒன்றை சேர்க்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து டெல்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வக இயக்குநர், “புவி சுழற்சி என்பது ஒரே சீராக இருக்காது. நிலவின் ஈர்ப்பு விசை, கடல் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட காரணிகளைப் பொருத்து புவி சுழற்சி மாறுபடும். இது, பூமியின் கால நேரத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால், இந்த மாற்றம் நமது உலக கடிகாரத்தில் நேர மாற்றத்தை ஏற்படுத்தாது. அது எப்போதும் போலவே நேரத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கும். அதேவேளையில், புவி சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு நேரத்தைக் காண்பிக்கும் வானியல் கடிகாரத்தில்தான் இந்த நேர மாற்றம் தென்படும்.

இந்நிலையில், புவி சுழற்சியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, வரும் 2017-ஆம் ஆண்டு புத்தாண்டானது வானியல் கடிகாரத்தின்படி ஒரு நொடி காலதாமதமாக பிறக்க இருக்கிறது. இதனை ஈடுகட்டும் வகையில், உலக கடிகாரத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 11 மணி 59-ஆவது நிமிடம், 59-ஆவது நொடிக்குப் பிறகு செயற்கையாக ஒரு “லீப்’ நொடி சேர்க்கப்படும். இது, வானியல் கடிகாரத்துக்கும், உலக கடிகாரத்துக்கும் இடையே ஏற்படும் தாமதத்தை ஈடுசெய்யும்.உலகக் கடிகாரத்தில் கால அளவியல் விஞ்ஞானிகள் ஒரு “லீப்’ நொடியைச் சேர்த்த பின்னர், அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளின் கடிகாரத்தில் நேர மாற்றம் செய்யப்படும். கடந்த 1972-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 36 “லீப்’ நொடிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 2017-ஆம் ஆண்டுடன் சேர்த்து இந்த எண்ணிக்கை 37-ஆக உயர்கிறது”என்று தெரிவித்தனர்