தடகள சாம்பியன்ஷிப்: வெள்ளிப்பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

தடகள சாம்பியன்ஷிப்: வெள்ளிப்பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

மெரிக்கா, ஓரிகான் மாநிலம், யூஜின் நகரத்தில் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா தகுதிச்சுற்றில் 83.39 மீட்டர் தூரம் எறிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2வது இடத்தைப் பிடித்த நிலையில், அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

தற்போதைய நிலையில் தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 2வது இந்திய வீரர் மற்றும் முதல் ஆண் தடகள வீரர் என்கின்ற பெருமையையும் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.

Grenada–வின் ஆன்டர்சன் பீட்டர்ஸ் தங்கப்பதக்கமும், செக்குடியரசின் Jakub Vadlejch வெண்கலப் பதக்கமும் வென்றனர். வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் . அனுராக் தாக்கூர், தமிழக முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம், உலக தடகள சாம்பியன் போட்டியில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். முன்னதாக, கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலக தடகள சாம்பியன் போட்டியின், நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலப்பதக்கம் வென்றார்.

error: Content is protected !!