தமிழ் குரல் / AI Voice
5 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்றுள்ளது. ஆஸ்திரேலியா-இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் பல்லகெலேயில் நேற்று தொடங்கியது.

ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.அப்போது ஆஸ்திரேலிய ரசிகர் ஒருவர் தன்னுடைய ஆடைகள் முழுதையும் கலைந்து விட்டு மைதானத்திற்குள் நிர்வாணமாக நுழைந்துள்ளார்.
இதனால் போட்டியின் போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் போலீசார் தலையிட்டு அவரை மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.இது போன்ற சர்வதேச போட்டிகளின் போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் பந்தயம் கட்டி நடந்து கொள்வது தொடர்கதையாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
