நானும் Single தான் – விமர்சனம்!

நானும் Single தான் – விமர்சனம்!

சினிமா எடுப்பது சிலருக்கு லட்சியம், சிலருக்கு பிழைப்பு, சிலருக்கு ஹாபி, சிலருக்கு காரணமே இருக்காது. இதில் எதிலுமே சேராமல் இளசுகளை. மட்டும் கவர வேண்டுமென்று சிலர் விரும்பி சினிமா எடுப்பதுண்டு . அதற்கு உதாரணம்தான் நானும் சிங்கிள் தான் படம்.  அதாவது ஆண்கள் மேல் நம்பிக்கையே இல்லாமல் தன்னால் சிங்கிளாவே வாழ்க்கை முழுவதும் வாழமுடியும் என நினைக்கும் பெண்ணுக்கும், கனவில் கூடா காதலிக்க பெண் கிடைக்காம; சிங்கிளாவே இருக்கும் இளைஞனுக்கும் இடையே நடக்கும் காதல், மோதல்தான் இப்படம்.

டாட்டூ வரையும் தொழில் செய்து வரும் அடக்கத்தி தினேஷுக்கு தீப்தியை பார்த்த அடுத்த கணமே காதல். ஆனால் பெண்ணியவாதியான தீப்திக்கோ திருமணம் என்றாலே வேப்பங்காய். ஆனாலும் தன்னை காப்பாற்றிய தினேஷுடன் நட்பாக பழகுகிறார். ஒருகட்டத்தில் நட்புக் கோட்டை தாண்டி எதிர்பாராமல் தீப்திக்கு முத்தம் கொடுத்து விடுகிறார் தினேஷ். கோபமான தீப்தி சொல்லாமல் கொள்ளாமல் வெளிநாடு போய்விடுகிறார்.பிறகென்ன ஹீரோ வெளிநாடு போய் துரத்தினாலும் பாரா முகமாக இருக்கிறார் தீப்தி.. ஒரு வழியாக தமிழகம் திரும்பியர். இனி யாரும் தன்னை காதலிக்கிறேன் என சொல்லிக்கொண்டு பின்னால் வரக்கூடாது என தீப்தி ஒரு அதிரடி முடிவெடுக்கிறார். அந்த முடிவு தினேஷையே ஆட்டம் காண வைக்கிறது. அப்படி என்ன முடிவெடுத்தார் தீப்தி, காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

அப்பாவி, அடப்பாவி என இரண்டும் கலந்த கலவையான முகத்துடன் படம் முழுக்க வளைய வருகிறார் தினேஷ். சில இடங்களில் அடடே என சொல்லவைக்கிறார். பல இடங்களில் அட போங்கய்யா என அலுப்பை ஏற்படுத்துகிறார். அதற்கு திரைக்கதையும் நண்பர்கள் என்கிற பெயரில் மொக்கை காமெடி பண்ணும் அவரது நண்பர்கள் கூட்டமும் காரணம். சில பல இடங்களில் வசனங்கள் ஆபாசத்தை  அப்பட்டமாக காடுகிறது. ஆனாலும் இப்போதையை ட்ரெண்டிங் டாக் இதுதான் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

கதாநாயகியாக மலையாளத்து வரவு தீப்தி சதி.. பெண்ணிய குணம் கொண்ட கதாபாத்திரத்திற்கு அழகாக பொருந்துகிறார். ஆனால் எதற்காக காதலை வெறுக்கிறார் என்பதற்கோ, க்ளைமாக் ஸில் ஏன் அப்படி ஒரு முடிவை எடுக்கிறார் என்பதற்கோ அழுத்தமான காரணம் இல்லை என்பதால், அவர்மீது நமக்கு கோபம் தான் ஏற்படுகிறதே தவிர பரிதாபம் ஏற்படவில்லை.

ஆனந்த்ராஜின் ஒளிப்பதிவில் லண்டன் காட்சிகள் அழகாக இருக்கின்றன. ஆண்டனியின் கத்திரிக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கலாம். ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையில் நாயகியின் இண்ட்ரோ பாடல் தவிர மற்ற பாடல்கள் எடுபடவில்லை. பின்னனி இசை சுமார் தான்.

இயக்குநர் கோபி கொஞ்சம் இன்னும் கொஞ்சம் யோசித்து இருக்கலாம்

ஆனாலும் 90 கிட்ஸை வைத்து பின்னப்பட்டிருக்கும் இப்படம் இக்கால யூத்-களுக்கும் பிடிக்க வாய்ப்புண்டு

மார்க் 2.5/5

error: Content is protected !!