தமிழக அரசின் 2009 டூ 2014-க்கான திரைப்பட விருதுகள் பட்டியல் விவரம்!

தமிழக அரசின் 2009 டூ 2014-க்கான திரைப்பட விருதுகள் பட்டியல் விவரம்!

தமிழக அரசின் 2009-14-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள், நெடுந்தொடர் விருதுகள், ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ்த் திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 இலட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1 இலட்சம், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரம், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரம் ரொக்கமும் முறையே நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ், சிறந்த தமிழ்த்திரைப்பட நடிகர், சிறந்த நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு முறையே 5 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ் மற்றும் மகளிரைப் பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் திரைப்ப டத்திற்குச் சிறப்புப் பரிசாக ரூ.1.25 இலட்சம் ரொக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்

அது போல் சின்னத்திரை விருதுகளுக்கு தேர்வு செய்யப்படும் சிறந்த நெடுந்தொடருக்கு முதல் பரிசாக ரூ.2 இலட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1 இலட்சம் ரொக்கம் முறையே நினைவுப் பரிசு, சான்றிதழ், சின்னத்திரை சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு முறையே 3 பவுன் தங்கப்பதக்கம் நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ், சிறந்த குறும்படங்கள் தயரித்த மாணவர்களுக்கு முறையே ஒரு பவுன் தங்கப்பதக்கம், ரூ.5,000/- பரிசு மற்றும் நினைவுக் கேடயம், தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படத்திற்கு ரூ.7 இலட்சம் மானியம், ஆகியவை வழங்கப்படுகின்றன.

2009-2014 முதல் பரிசு வென்ற சிறந்த திரைப்படங்கள் + நடிகர், நடிகைகள் + டெக்னிஷியன்கள் பட்டியல்

2009 சிறந்த படங்கள்

முதல் பரிசு – பசங்க
இரண்டாம் பரிசு – மாயாண்டி குடும்பத்தார்
மூன்றாம் பரிச – அச்சமுண்டு அச்சமுண்டு

2010 சிறந்த படங்கள்

முதல் பரிசு – மைனா
இரண்டாம் பரிசு – களவாணி
மூன்றாம் பரிசு – புத்ரன்

2011 சிறந்த படங்கள்

முதல் பரிசு – வாகை சூடவா
இரண்டாம் பரிசு – தெய்வத் திருமகள்
மூன்றாம் பரிசு – புத்ரன்

2012 சிறந்த படங்கள்

முதல் பரிசு – வழக்கு எண் 18/9
இரண்டாம் பரிசு – சாட்டை
மூன்றாம் பரிசு – தோனி

2013 சிறந்த படங்கள்

முதல் பரிசு – இராமானுஜன்
இரண்டாம் பரிசு – தங்க மீன்கள்
மூன்றாம் பரிசு – பண்ணையாரும் பத்மினியும்

2014 சிறந்த படங்கள்

முதல் பரிசு – குற்றம் கடிதல்
இரண்டாம் பரிசு – கோலி சோடா
மூன்றாம் பரிசு – நிமிர்ந்து நில்

சிறந்த இயக்குநர்

2009 – வசந்தபாலன் (அங்காடி தெரு)
2010 – பிரபு சாலமன்(மைனா)
2011 – ஏ.எல். விஜய் (தெய்வத் திருமகள்)
2012 – பாலாஜி (வழக்கு எண் 18/9)
2013 – ராம் (தங்க மீன்கள்)
2014 – ராகவன் (மஞ்சபை)

சிறந்த நடிகர்

2009 – கரண் (மலையன்)
2010 – விக்ரம் (ராவணன்)
2011- விமல் (வாகை சூட வா)
2012- ஜீவா (நீதானே என் பொன்வசந்தம்)
2013- ஆர்யா (ராஜா ராணி)
2014- சித்தார்த் (காவியத் தலைவன்)

சிறந்த நடிகை

2009 – பத்மபிரியா (பொக்கிஷம்)
2010 – அமலா பால் (மைனா)
2011 – இனியா (வாகை சூட வா)
2012 – லட்சுமிமேனன் (கும்கி, சுந்தரபாண்டியன்)
2013 – நயன்தாரா (ராஜா ராணி)
2014 – ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை)

சிறந்த நடிகர் – சிறப்புப் பரிசு

2009 – பிரசன்னா (அச்சமுண்டு அச்சமுண்டு)
2010 – ஒய்.ஜி. மகேந்திரா (புத்ரன்)
2011 – சிவகார்த்திகேயன் (மெரினா)
2012 – விக்ரம் பிரபு (கும்கி)
2013 – விஜய் சேதுபதி (பண்ணையாரும் பத்மினியும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா)
2014 – பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
சிறந்த நடிகை – சிறப்புப் பரிசு

2009 – அஞ்சலி (அங்காடித் தெரு)
2010 – சங்கீதா (புத்ரன்)
2011 – அனுஷ்கா (தெய்வத் திருமகள்)
2012 – சமந்தா (நீதானே என் பொன்வசந்தம்)
2013 – நஸ்ரியா (ராஜா ராணி)
2014 – ஆனந்தி (கயல்)

சிறந்த நகைச்சுவை நடிகர்

2009- கஞ்சா கருப்பு (மலையன்)
2010- தம்பி ராமையா (மைனா)
2011-மனோபாலா (பல படங்கள்)
2012-சூரி (மனம் கொத்தி பறவை, பல படங்கள்)
2013-சத்யன் (ராஜா ராணி)
2014- சிங்கமுத்து (பல படங்கள்)

சிறந்த வில்லன் நடிகர்

2009 – பிரகாஷ்ராஜ் (வில்லன்)
2010 – திருமுருகன் (களவாணி)
2011 – பொன்வண்ணன் (வாகை சூடவா)
2012 – விஜய் சேதுபதி (சுந்தரபாண்டியன்)
2013 – விடியல் ராஜ் (ஆள்)
2014 – பிருத்விராஜ் (காவியத் தலைவன்)

சிறந்த குழந்தை நட்சத்திரம்

2009 – கிஷோர், ஸ்ரீராம் (பசங்க)
2010 – அஸ்வத்ராம் (நந்தலாலா)
2011 – சாரா (தெய்வத் திருமகள்)
2012 – சாதனா (தங்க மீன்கள்)
2012 – விக்னேஷ், ரமேஷ் (காக்கா முட்டை)

சிறந்த இசையமைப்பாளர் விருது

2009 – சுந்தர் சி பாபு (நாடோடிகள்)
2010 – யுவன் சங்கர் ராஜா (பையா)
2011 – ஹாரீஸ் ஜெயராஜ் (கோ)
2012 – இமான் (கும்கி)
2013 – ரமேஷ் வினாயகம் (ராமானுஜன்)
2014 – ஏ.ஆர். ரகுமான் (காவியத் தலைவன்)

சிறந்த பாடலாசிரியர் விருது

2009 – யுகபாரதி (பசங்க)
2010 – பிறைசூடன் (நீயும் நானும்)
2011 – முத்துலிங்கம் (மேதை)
2012- நா. முத்துக்குமார் (பல படங்கள்)
2013 – நா. முத்துக்குமார் (தங்க மீன்கள்)
2014 – நா. முத்துக்குமார் (சைவம்)

சிறந்த நடன இயக்குனர்

2009 – தினேஷ்
2010 – ராஜு சுந்தரம்
2011 – லாரன்ஸ்
2013 – ஷோபி
2014 – காயத்ரி ரகுராம்

error: Content is protected !!