டி 20: இந்திய அணிக்கு தோனி ஆலோசகர் – பிசிசிஐ அறிவிப்பு!

டி 20: இந்திய அணிக்கு தோனி ஆலோசகர் – பிசிசிஐ அறிவிப்பு!

க்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதிவரை பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்கின்றன. இதற்கான 15பேர் கொண்ட இந்திய அணியை அனைத்து இந்திய சீனியர் தேர்வுக்குழு நேற்று அறிவித்தது. இதில் 4 ஆண்டுகளுக்குப்பின் அஸ்வின் அணிக்குள் வந்துள்ளார். இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக அஸ்வின் விளையாடினார் அதன்பின் உலகக் கோப்பைப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

தோனியை எப்படியாவது மீண்டும் இந்திய கிரிக்கெட் அணி செட்-அப்பில் பார்க்க வேண்டும் என்ற தல ரசிகர்களின் ஆவல் நிறைவேறியுள்ளது, அதே வேளையில் கோலியின் கேப்டன்சி, அணித்தேர்வு கோளாறுகளுக்கும் ஒரு செக் வைக்க தோனி நியமிக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் ரவிசாஸ்திரி ஏறக்குறைய கோலி செய்வதையெல்லாம் ரசிப்பவராக பாராட்டுபவராக இருக்கிறார். மேலும் இளம் வீரர்களுக்கு தோனியின் வருகை ஒரு வரப்பிரசாதம். அவரது ஆலோசனைகள், அறிவுரைகள் இளைஞர்களுக்கு விலைமதிப்பற்றது.

ஒரு ஐபிஎல் கோப்பையை கூட கோலி வென்றதில்லை மாறாக தோனி ஐபிஎல் கோப்பைகளை வென்றவர்., 2007டி20 உலகக்கோப்பையை வென்றவர், 2011 உலகக்கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றவர், டி20 வடிவத்தின் உத்தி வகுப்பில் தோனி ஒரு தாதா, இவர் அளவுக்கு டி20 கிரிக்கெட்டின் திடீர் திருப்பங்களையும் போக்கையும் கணிப்பவர்கள் யாரும் இல்லை என்றே கூறி விடலாம்.

அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும் என ஐசிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சர்வதேச துபாய் மைதானம், அபு தாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், ஓமன் கிரிக்கெட் அகாடெமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.

டி20 அணியில் பிரிதிவி ஷா இல்லாதது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே. ஆனால் சமீபத்திய பார்ம் அடிப்படையில் வலுவான அணியை தேர்வு செய்துள்ளனர். மிடில் ஆர்டர் வரிசையில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. ஆல் ரவுண்டர்களாக ரவிச்சந்திர அஸ்வின், ஜடேஜா, ஹர்தி பாண்டியா ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. க்ரூணல் பாண்டியாவிற்கு இடம் கிடைக்கவில்லை. நான் அவ்வப்போது வந்து ஆடிவிட்டுச் செல்பவனல்ல என்று நேற்றுதான் பேட்டி கொடுத்தார் பாவம்.அணியில் தமிழக வீரர் டி.நடராஜனுக்கு இடம் கிடைக்கவில்லை என்ற வருத்தங்களையும் மீறி சமூக வலைத்தளங்களில் தோனியின் எண்ட்ரியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங்கா, பீல்டிங்கா, தொடக்க ஓவர்களில் ஸ்பின்னர்கள் பயன்படுத்துவது, பவர் ப்ளே உத்தி, மிடில் ஓவர் பந்து வீச்சு களவியூகம், கடைசி ஓவர்களை யாரிடம் கொடுப்பது, எந்த பவுலரின் ஓவர்களை மீதம் வைப்பது போன்ற விவகாரங்களில் கோலியை விட தோனி தாதாகிரி, அனைத்துக்கும் மேலாக கோலி ஒருவர் பேச்சைக் கேட்பார் என்றால் அது தோனியாக மட்டுமே இருக்க முடியும் ஆகவே தன்னிஷ்டத்துக்கு கோலி அணித்தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்க முடியாது, நிச்சயம் அதற்கு தோனி செக் வைப்பார்.

error: Content is protected !!