மகேந்திர சிங் தோனி சூப்பர் ஹீரோவாக தோன்றும், ‘அதர்வா: தி ஒரிஜின்’ – கிராஃபிக் நாவல்!.

மகேந்திர சிங் தோனி சூப்பர் ஹீரோவாக தோன்றும், ‘அதர்வா: தி ஒரிஜின்’ – கிராஃபிக் நாவல்!.

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான‘எம்.எஸ் தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’ என்ற திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தமிழரான ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதிய ‘அதர்வா: தி ஆர்ஜின்’ என்ற கிராஃபிக் நாவலில் சூப்பர் ஹீரோவாகவும், போர் வீரர்களின் தலைவராகவும் தோனி தோன்றுகிறார்.

விர்ஸு ஸ்டூடியோஸ் மற்றும் மிடாஸ் டீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள, இந்த கிராஃபிக் நாவலுக்கான மோஷன் போஸ்டரை, தோனி தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். ‘அவெஞ்சர்ஸ்’, ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’, ‘பாகுபலி’ போன்ற கதையை பின்னணியாக கொண்ட இந்த கிராஃபிக் நாவலில், தோனியின் தோற்றம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நாவலுக்காக 150 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்து வருவதால்தான், அதனை ஊக்குவிக்க தோனியை வைத்து இந்த கிராஃபிக் நாவல் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த அனிமேஷன் காமிக்சில் தோனி ஒரு அகோரியாக நடிக்கிறார். அகோரியாக இருக்கும் தோனியை பிடித்து, ஒரு விஞ்ஞானி ஆராய்ச்சி செய்கிறார். அப்போது பண்டைய காலத்தில் அகோரியின் சக்தி, வரலாறு தோனியின் மூலம் வெளிப்படுகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பது தான் கதை. தோனியின் இந்தப் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கிராஃபிக் நாவல் வெப் சீரிஸாக அமேசான் தளத்தில் வெளியாக உள்ளது. இதனை தோனி என்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பதாக, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தோனியின் மனைவியுமான சாக்ஷி தோனி கூறியுள்ளார். இந்த கிராஃபிக் நாவல் கதை விறுவிறுப்பாகவும், புதியதாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாவல் குறித்து தோனி கூறியுள்ளதாவது, “இந்த நாவலில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். ‘அதர்வா: தி ஆர்ஜின்’ ஆர்வத்தை தூண்டக் கூடிய விறுவிறுப்பான கதைக்களத்தையும், அட்டகாசமான ஓவியங்களை கொண்ட ஒரு கிராஃபிக் நாவல். இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும், எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் முயற்சி, ஒவ்வொரு வாசகரையும் மென்மேலும் படிக்கத் தூண்டும்” இவ்வாறு தோனி கூறியுள்ளார்.

இது குறித்து ரமேஷ் தமிழ்மணி கூறும்போது, “அதர்வா கதாபாத்திரம் என்னுடைய கனவு படைப்பு. என் இதயத்துக்கு நெருக்கமான ஒன்று. இதை நாங்கள் உருவாக்க பல ஆண்டுகளை செலவு செய்துள்ளோம். அதர்வா கதாபாத்திரத்தில் தோனி தோன்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. விரிவான ஆராய்ச்சிக்கு பிறகுதான் உருவாக்கப்பட்டது. இதில் உள்ள ஒவ்வொரு பக்கமும், நாங்கள் எவ்வளவு உழைத்திருக்கிறோம் என்பதை எடுத்துக் கூறும். தயாரிப்பார்கள் வின்சென்ட் அடைக்கலராஜ், அசோக் மேனர் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் இல்லாமல் இந்த திட்டம் சாத்தியமாகியிருக்காது” என்றார்.

error: Content is protected !!